பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கந்தவேள் கதையமுதம் சங்க காலத்தில் மாமூலனார் என்று ஒரு புலவர் இருந்தார். 'மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்; அதனால் அந்தப் பெயர் ஏற்பட்டது என்று சிலர் பொருள் சொல்வார்கள். ஆனால் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானுக்கு மாமூலனார் என்று பெயர் உண்டு. மூலம் என்றால் அடி. மா மூலம் - மா மரத்தின் அடி; அதுவே மாவடி மாவடி என்ற பெயரையே சிலர் வைத்துக்கொள்கிறார்கள். மாமூலனார் என்பது மாமரத்தின் அடியில் எழுந்தருளியிருக்கிற சிவபெருமானைக் குறிக்கும். பழங்காலத்தில் இறைவனுடைய பெயர்களை வைத்துக் கொள்கிற வழக்கம் புலவர்களிடையே இருந்தது. காஞ்சிபுரத்து ஏகாம்பரநாதரையே மாமூலனார் என்று சொல்லலாம். அப்படியே காமாட்சியின் திருநாமத்தைக் கொண்ட காமக்கண்ணி என்ற பெண் புலவர் சங்க காலத்தில் இருந்தார். காமக்கண்ணி என்பது காமாட்சி என்பதன் வேறு உருவம். ஏகாம்பரநாதரின் திருநாமத்தை ஒரு புலவர் கொண்டிருக்கிறார், காமாட்சியின் திருகாமத்தை ஒரு பெண் புலவர் கொண்டிருக்கிறார் என்பது இவற்றால் தெரியவருகிறது. சிவபெருமானுக்கு எது பெயரோ அதையே முருகப்பெரு மானின் பெயராக்கி, சிவபெருமான் வேறு, முருகன் வேறு அல்லர் என்பதை உணர்த்தும் வகையில் அந்த மாவடியைப் போற்றுகிறார். காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி! சூரசங்காரம் ஆன பிறகு சூரன் சேவலும், மயிலும் ஆயினான். அதனை நினைப்பூட்டுகிறார். அவ்வாறு செய்த வேலைப் போற்றுகிறார். அன்னாள் சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி போற்றி! இந்தப் பாடலில் கந்தபுராணத்தின் தொடக்கமும், முடிவும் குறிப்பாகத் தெரிகின்றன. வாழ்த்து அடுத்து வாழ்த்துச் சொல்ல வருகிறார் கச்சியப்ப சிவாசாரியார். வான்முகில் வழாது பெய்க! என்று தொடங்குகிறது அந்த வாழ்த்து. இறைவனுக்கு அடுத்தபடி யாக நிலவுவது மழை. அதனால்தான் வள்ளுவர் கடவுள் வாழ்த்