வீரவாகுவின் வீரச் செயல்கள் 361 "அவனைப் பிள்ளையென்று சொன்னாயே. அவன் எங்கும் நிறைந்திருப்பவன். எல்லா முகங்களும் அவன் முகங்களே. எல்லா விழிகளும் அவன் விழிகளே. எல்லாக் கரங்களும் அவன் கரங்களே. அவன் இல்லாத இடம் இல்லை. எல்லாவற்றினூடேயும் அவன் இருக்கிறான்."சிறுவனாக இருப்பான். குருவைப் போலத் தோற்று வான். தினையை விடச் சிறியவனாகத் தோற்றுவான். நெடியனாகவும் தோற்றுவான். இப்படி எத்தனையோ உருவங்களைக் கொண்டு நிலவுவான். முருகப்பெருமானுடைய திருவிளையாடலை யார் தெரிந்து கொள்ள முடியும் ?" என்றார். சிறுவன் போல்உறும்; குவனே போல்உறும்; தினையிற் குறியன் போல்உறும்; நெடியவன் ஆகியும் குறுகும்; நெறியின் இன்ளணம் வேறுபல் உருக்கொடு நிலவும்; அறிவர் நாடரும் கந்தவேள் ஆடல்ஆர் அறிவார்? அனைபுகு.187.} (குரவன்-ஆசாரியன். தினையின் - தினையை விட, குறுகும். வருவான். இன்னணம் - இப்படி. அறிவர் - ஞானிகள்.] S நீ ஆயிரத்தெட்டு அண்டங்களை ஆளுவதாகச் சொல்கிறாயே. அவை எங்கள் முருகப் பெருமானின் பெரிய வடிவத்தில் உள்ள ஓர் ரோமத்தின் உள்ள அண்டங்களுக்குச் சமம் ஆகா." ஆன்று கந்தவேள் அமைந்ததுஓர் பெருவடி வதனுள் ஒன்று ரோயத்தின் இருந்ததற்கு ஆற்றிடாது, உனதாய்த் துன்றும் ஆயிரத் தெட்டெனும் அண்டமாம் தொகையும்; இன்று நீஅது தெரிகிலை; சிறுவன்என்று இசைத்தாய். (அவை புகு.144.) (ரோமத்தின் இருந்ததற்கு ஆற்றிடாது - உரோமத்தில் உள்ள அண்டங்களுக்குச் சமானம் ஆகரது.] இவற்றை யெல்லாம் நீ தெரிந்து கொள்ளவில்லை. மிகவும் இழிந்த சொல்லாலே, என்னுடைய பெருமானைச் சொன்ன உன் நூவை நானே வெட்டிவீடுவேன். எனக்கு வருகிற கோபத்தில் உன் உயிரையே ஒரு நொடியில் வாங்கிவிடுவேன். அது என்னுடைய பெருமானின் ஆணை அன்று. அதனால் சும்மா விடுகிறேன். நீ உயிர் நீ பிழைத்திருக்கிறாய். எம்பெருமானின் வேலுக்கு நீ இரையாகப் போகிறாய். அது உன் தலைவிதி" என்றார். 46
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/381
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை