பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 கந்தவேள் சுதையமுதம் நகரை மீண்டும் அமைத்தல் அப்போது சூரனுக்குக் கொஞ்சம் தெம்பு உண்டாயிற்று. வீரவாகு தேவர் அழித்துவிட்ட மகேந்திரபுரியை மீட்டும் செப்பனிட வேண்டுமென்று வாருங்கள்" என்றான். எண்ணி, 6 பிரமனை அழைத்து அண்டங்கள் பலப்பல. ஒவ்வோர் அண்டத்திற்கும் ஒவ்வொரு பிரமன் இருக்கிறான். நம்முடைய நாட்டில் ஒவ்வொரு ராஜ்யத் திற்கும் ஒவ்வொரு கவர்னர் இருக்கிற மாதிரி, பிரமர்களும் பலர் உண்டு. சூரனுக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் "நம்முடைய அண்டத்தில் இருந்து பிரமன்,பூமிக்குச் சென்று காங்கேயனாகிய முருகனோடு சேர்ந்துவிட்டதாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள் என்றார்கள். சங்கிது கேட்டி மன்ன, இனையமு தண்டம் நல்கும் தேங்கமழ் பதுமத்து அண்ணல் தேவர்கோன் ஆதி யான மாங்கின ரோடு மேனிப் படையொடும் புவியில் வந்த காங்கெயன் தன்கண் உற்ருன் என்பரால் கண்டோர் என்றார். . (சூரன் நகர் புரி.21. [இனைய முகண்டம் நல்கும் - இந்தப் பழைய அண்டத்தை படைத்த. பதுமத்து அண்ணல் - பிரமன்.] உடனே சூரன், 'வேறு அண்டங்களிலிருந்து வேறு யாரேனும் ஒரு பிரமனைக் கூட்டி வாருங்கள்" என்று சொன்னான். மற்றோர் அண்டத்திலிருந்து வேறு ஒரு பிரமளைக் கூட்டி வந்தார்கள். அந்தப் பிரமனைக் கொண்டு மீண்டும் பழையபடியே நிர்மாணிக்கச் செய்தான் சூரன். மகேந்திரபுரியை ஒற்றர் முருகன் படைத்திறம் அறிந்து வருதல் போர் செய்கிறவர்கள் மாற்றான் வலியையும் தன் வலியையும் துணை வலியையும் தெரிந்து கொண்டு போர் செய்யப் புகவேண்டு மென்று திருவள்ளுவர் சொல்கிறார்.