பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 கந்தவேள் கதையமுதம் "சூரன் என்ற பெயரோடு மிகப் பழையவனாகிய நான் இருக்கி றேன் என்று அவன் சொன்னான். பழமையானவன் என்பதைத் தொல்லையேன் என்பதால் குறிக்கிறான். அதற்கு மற்றொரு பொருள் தொனிக்கிறது. 'மிகவும் தொல்லை கொடுப்பவன் நான்' என்றும் பொருள் தொனிக்கிறது: 'இப்போது தொல்லைப் படுகிறவன்' என்னும் மற்றொரு பொருளும் தோன்றுகிறது. "மிகச் சிறிய பாலகன் என்பதால் நான் போர் செய்யாமல், இருந்தேன். குழந்தையுடன் போர் செய்து வெற்றி பெற்றால் அது முறையும் ஆகாது; புகழும் ஆகாது. அதற்காகச் சும்மா இருந்தேன் இல்லாவிட்டால் ஒரு கணத்தில் அவனை அழித்திருப்பேன் " என் அவன் சொன்னான். அப்போது மேதி என்ற அசுரன் எழுந்தான். அவன் மகி சுரன்; "பாலன் என்று முருகனைப் பாராமல் அப்போதே அவ சென்று நீ அழித்திருப்பாயானால், வீரவாகு இந்த நகரத்துக்கு வரு இதனை அழித்திருப்பானா? அதை நீ செய்யவில்லை. இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கலாமா?" முன்னம்அக் குமரன்மேல் முனிந்து சேறியேல் உன்னகர்க்கு ஏகுமோ ஓற்று ? மற்றுநி அன்னது புரித்திலை; ஆடல் மைந்தனோடு இந்நகர் அழிந்ததுஎன்று இரங்கற் பாலையோ? (சூரன் அமைச்சியல். 32,) (சேறியேல் - சென்றிருந்தால். ஒற்று -தூதுவள். ஆடல் - வெற்றியை உடைய.) செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்யா மல் இருந்துவிட்டு நம்முடைய மகன் இறந்துவிட்டானே, நகரம் அழிந்து விட்டதே என்று இப்போது வருந்துவதால் என்ன பயன்? இப்போதே போய்ப் போர் செய்து அவர்களை அழித்து விட வேண்டும்" என்று அவன் சொன்னான். மற்றவர்களும் அப்படியே சொன்னார்கள். "நீ போக வேண்டாம். படைகளை அனுப்பி அவர்களை அழித்துவரச் சொல்" என்று அவர்கள் சொன்னார்கள். துர்க்குணன், தருமகோபன், கண்டன், சிங்கன் ஆகியவர்கள் எல்லாம் இதையே சொன்னார்கள்.