372 i கந்தவேள் கதையமுதம் '" அப்போதே வரம் கொடுத்த பரமேசுவரன் உனக்கு அவன் அளித்த செல்வத்துடன் நூற்றெட்டு யுகம் வாழலாம் என்று சொன்னான். அந்தக் காலம் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களே உள்ளன. ஆகையால் நமக்கு முடிவு வரப்போகிறது. அதனால்தான் நீ இவ்வாறு பேசுகிறாய். விதி வலியை யாவர் வெல்ல முடியும் ?" அமரர் தம்பெரும் சிறையினை நீக்குதி ஆயின், குமர நாயகன் ஈண்டுபோர் ஆற்றிடக் குறியான்; நமது குற்றமும் சிந்தையிற் கொள்ளலன் ; நாளை இமைஓடுங்குமுன் கயிலையின் மீண்டிடும் எந்தாய். (சூரன் அமைச்சியல்.104.} (குறியான் என்னமாட்டான். 'எந்தாய்' என்று சிங்கமுகன் சொன்னான். 'என் அப்பனே' என்று பொருள். அண்ணா என்று விளிக்கவில்லை. அண்ணன் தம்பிகளிடம் பங்காளிச் சண்டை இருக்கும். எல்லோருக்கும் பிரிய மான சொல்லால் எந்தாய் என்று விளித்தாள். "தேவர்களைச் சிறை நீக்கினால், குமாரநாதன் போர் செய்ய மாட்டான். அவன் கருணை மிகுந்தவன். நாம் செய்திருக்கும் குற்றங்களைத் தன் பெரும் கருணைத் திறத்தால் மன்னித்துவிடுவான். தன் அடியார்களுக்கு வரும் துன்பத்தை அவன் சகிக்கமாட்டான். ஆகவே, தேவர்களை விட்டுவிடு, நாளைக்கே இங்கிருந்து புறப்பட்டு அவன் கைலாசத்திற்குப் போய்விடுவான்" என்றான். சூான் சினந்து கூறல் எல்லோரும் பஞ்சில் பெட்ரோலையும்,நெருப்பையும் போடும் போது இவன் மட்டும் தண்ணீர்விட்டால் சூரபன்மாவுக்குச் சினம் வராதா?"நம் கருத்துக்குத் துணையாக நிற்க வேண்டியவன் இவ்வாறு கூறுகிறானே! என்று கோபம் வந்தது. அவன் பேசத்தொடங்கினான். "நேற்று வரைக்கும் நமக்கு ஏவல் செய்து வந்தவர்கள் தேவர்கள்.ம் செருப்புக்களைத் தூக்கிக்கொண்டு திரிந்தவர்களைக் கண்டு நீ பயப்படுகிறாய். உன் கருத்து அழிந்துவிட்டது. மனத்தில் ஏதோ கோளாறு வந்துவிட்டது. உன் அறிவு போய்விட்டது. மும்மூர்த்திகளையும் அழிக்கின்ற பலம் உள்ள நீ ஏன் இப்படிப்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/392
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை