பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் 373 பயப்படுகிறாய்? பூத கணங்களைக் கண்டு பயப்படுகிறாயா? அந்தச் சின்னக் குழந்தையைக் கண்டு பயப்படுகிறாயா ? " என்றான். ஏவல் தொண்டுசெய்து இன்னமும் கரந்தஇந் திரற்கும் தேவர்க் கும்சிறு பாலற்கும் சிவனுறை கயிலைக் காவல் பூதர்க்கும் அஞ்சினை : கருத்துஅழிந் தனையோ? மூவர்க் குப்வெலற்கு அரியதோர் மொய்ம்புகொண் டுடையோய்! ரூரன் அமைச்சியல். 107.) (கரந்த - மறைந்திருந்த. மொய்ம்பு - வலிமை.] ஆதி நாயகனாகிய பரமேசுவரன்தான் நமக்கு வரம் கொடுத் தான். அவனுடைய சக்தியாகிய முருகன் இப்போது வந்துள்ளான் என்கிறாய். வரம் கொடுத்தவனே எங்காவது வரத்தை அழிப்பானா? ஆதி நாயகன், எம்பெரும் சத்தியே அல்லால் ஏதி லார்கொலார் என்னினும் சத்தியும் இறையும் பேத மோ? வரம் கொடுத்தவன் அடும்என்கை பிழையே. ஓதல் ஆவதோர் வழக்கமே, உண்மை அதுஅன்றால். [ஏதிலார்-அயலார். என்னினும் சூரன் அமைச்சியல். 110.) என்றுசொன்னாலும்.] சிவன் வேறு, சக்தி வேறு அல்ல. பரமசிவனுக்கும் பராசக்திக் கும் வேறுபாடு இல்லை என்று சித்தாந்தம் சொல்லும் உண்மையைச் சூரன் சொல்கிறான். பொல்லாதவர்கள் சில சமயம் தங்களுடைய கருத்துக்குச் சாதகமாகச் சாத்திரங்களை மேற்கோள் காட்டுவார்கள். அப்படி, சிவனுக்கும் சக்திக்கும் உள்ள அபேதத்தைச் சூரபன்மன் தனக்குச் சாதகமாகச் சொல்கிறான். $5 அடுத்தபடியாக, "அந்தச் சின்னப் பிள்ளை என்கை வெல்வான் என்று சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா ?" என்று சொல்லி ஓர் உவமையைக் கூறினான். ஒரு குருடன் ஆகாசத்தில் இருந்த சூரியனைப் பார்த்துக் கனி என்று சொன்னானாம். அருகில் இருந்த. இரண்டு கையும் இல்லாத முடவன் அதைத் தின்னலாம் என்று