பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் 375 முடியாது. ஆலம் வித்திற்குள்ளே ஆலமரத்தின் இலை, கிளை,விழுது எல்லாம் அடங்கியுள்ளன. அப்படி முருகப்பெருமானிடத்தில் எல்லாத் தத்துவங்களும் அடங்கியுள்ளன. இதை நீ எப்படி அறிவாய்?" என்றான். அதற்குமேல் அவன் சொல்வது மிகவும் அருமையான வாசகம். வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் வீரிந்த போதக் காட்சிக்கும் காணலன். வேதம் மூன்று பகுதியாக இருக்கிறது. உபாசனா காண்டம். கர்ம காண்டம், ஞான காண்டம் என்று மூன்று. ஆண்டவன் வேதங் களாலும் அறிய முடியாதவன். கர்மகாண்டம் வருணாசிரம முறைகளுக்கேற்ப இன்னார் இன்னார் இன்ன இன்ன செயல்களைச் செய்ய வேண்டுமென்று சொல்லும். உபாசனாகாண்டம் அக்கினி மூலமாக இன்ன இன்ன தேவர்களுக்குப் பிரீதியாக இன்னபடி ஆகுதி செய்ய வேண்டுமென்று சொல்லும். ஞானகாண்டம் என்பது உண்மையான மெய்ப்பொருளைச் சொல்லும். அதை உபநிஷத் என்பர். அதுதான் வேதத்தின் முடிவில் இருப் பது. அதை வேதாந்தம் என்றும் வேதத்தின் கொழுந்து என்றும் சொல்வது வழக்கம். மற்றவைகள் அடிமரம், கிளைகளைப் போன்றவை. உபநிடதம் ஞான சொரூபமாகவே உள்ளது. '" அதுவும் கூட ஆண்டவனைக் காண முடியாது" என்று சிங்கமுகன் சொன்னான். வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரிந்த போதக் காட்சிக்கும் காணலன்; புதியரிற் புதியன் ; மூதக் கார்க்குமூ தக்கவன், முடிவிற்கு முடிவாய் ஆதிக்கு ஆதியாய், உயிர்க்குயி ராய்நின்ற அமலன். (குரன் அமைச்சியல்.127.) முருகப்பெருமான் மிகப் புதியவருக்கும் புதியவனாக இருப்பான். மிக மூத்தவருக்கும் மூத்தவனாக இருப்பான். முடிகின்ற பொரு ளுக்கு முடிவாய் இருப்பான். முதலில் தோன்றிய பொருளுக்கும் முதல்வனாக இருப்பான். எல்லா உயிர்களுக்கும் உயிராய் இருக்கிற பெருமான் அவன் " என்றான்.