பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கிறது. கந்தவேள் கதையமுதம் இதைத்தான் சிவஞானபோதத்தின் முதல் சூத்திரம் சொல் 64 அந்தம் ஆதி என்மனார் புலவர். எல்லாவற்றுக்கும் கடைசியில் எவன் இருக்கிறானோ, எல்லாம் அழிந்த பின்னும் எவன் இருக்கிறானோ, அவன்தான் முதல் முதலாக உள்ள சிருஷ்டியைச் செய்கிறான். அவனே எல்லோருக்கும் மூத்த வாைக இருக்கிறான். ஒரு கோவில். அர்த்த மண்டபம், மகா மண்டபம், கோபுரவாசல் எல்லாம் இருக்கின்றன. ஒவ்வொரு மண்டபத்திற்கும் ஒரு வாசல், அதற்குக் கதவு, பூட்டு, சாவி இருக்கின்றன. ஆராதனை முடிந்த வுடன் குருக்கள் கர்ப்பக்கிருகத்தை பூட்டிக்கொண்டு வெளி வரு கிறார். அர்த்த மண்டபத்தைக் கண்காணிப்பாளர் பூட்டுகிறார். பின்னர் வெளி வாசல் கதவைக் கோவில் காவல்காரன் பூட்டுகிறான். திறக்கும்போது, 'பூட்டிய முறைப்படியேதான் குருக்கள் முதலில் திறக்க வேண்டும். அடுத்துக் கண்காணிப்பாளர் திறக்க வேண்டும். பிறகுதான் காவல்காரன் திறக்கவேண்டும்' என்று சொல்ல முடியுமா? யார் கடைசியில் பூட்டினானோ அவன் தான் முதலில் திறந்துவிடுவான். அப்படி,எல்லாவற்றையும் சங்காரம் பண்ணி, கடைசியில் எஞ்சி யிருக்கிற பெருமானே எல்லாவற்றுக்கும் முதலாக இருக்கிறான் என்று சிவஞானபோதம் சொல்கிறது. இங்கே முருகப்பெருமான் சிவனையன்றி வேறு அல்லன் ஆகை யால் ஆதிக்கு ஆதியாய், அந்தத்திற்கு அந்தமாய் இருக்கிறான் என்று சிங்கமுகன் சொன்னான். இப்படி உள்ள பெருமான் ஞானமே உருவாக உள்ளவன். ஞானம் வேறு, முருகன் வேறு அல்ல. அவனை ஞானபண்டித சாமி என்று அருணகிரியார் சொல்வார். நீயான ஞான வினோதந் தனை என்று நீ அருள்வாய்" என்று கந்தர் அலங்காரத்தில் சொல்கிறார். ஞான சொரூபியாகிய அவனை ஞானம் அடைந்தவர்களால் தான் காண முடியும். பொறி, புலன்களினால் காண ஒண்ணாது. ஞானத்திற்கு வாயிலாக இருப்பது மோனம்.