பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் 379 தேவி பாரம் பொறுக்காமல் உன்னிடம் முறையிட, நீ அவளுக்கு உதவியாக யாவரையும் அழிக்க வந்திருக்கிறாய்" என்றான். என்றான். "நீபா ரத் அமரில் யாவரையும் நீறாக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணா $3 "அப்படியானால் பாரதப்போர் நடக்காமல் இருக்க ந ஏதாவது வழியைச் சொல்" என்று கேட்டான் கண்ணன். அதற்குச் சகா தேவன் சொன்னான். பாசாளக் கன்னன்இகல் பார்த்தனைமுன் கொன்று அணங்கின் காரார் குழல்களைந்து காவில் தளை பூட்டி நேராகக் கைப்பிடித்து நின்னையும்யான் கட்டுவனேல் வரராமல் காக்கலாம் மாபா ரதம்என்றான்." நீ சொன்ன நிபந்தனைகள் எல்லாம் நிறைவேறினாலும்,என்னை எவ்வாறு கட்டுவாய்?" என்றான் கண்ணன். அப்போது சகாதேவன், உன்னையே உனக்குத் தெரியாது, கண்ணா. உன்னுடைய இந்த வடிவம் மாத்திரம் அல்ல, உன்னுடைய வடிவங்கள் எல்லாவற்றையும் காட்டு. நான் கட்டிவிடுகிறேன் என்று சொன்னான். 14 "முன்னம்நீ கூறியவை எல்லாம் முடிந்தாலும். என்னைக் கட்டுமாறு எவ்வாறு? எனமாயன், உன்னைந் தானும் உணராதாய்; உன்வடிவம் தன்னைநீ காட்டத் தளைந்திடுவன் யான்என்றான்," FF கண்ணன் தன் பெரிய வடிவத்தை எடுத்துக்கொண்டான். எவ்வளவு பெரிய வடிவத்தை எடுத்துக்கொண்டால் என்ன? சகாதேவன் தன்னுடைய அன்பினால் அப்பெருமானின் இரண்டு திருவடிகளைகளையும் தன் கருத்தினால் பிணைத்துவிட்டான். அங்கே சகாதேவன் சொன்னானே, "உன்னை நீ தானும் உணராதாய் என்று, அது போலச் சிங்கமுகன் முருகப் பெருமானைக் சொல்லும்போது