பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 கந்தவேள் கதையமுதம் தானும் காண்கிலன் இன்னமும் தன்பெருத் தலைமை என்றான். விரிவுரையாற்றுபவர்களுக்கு ஓர் அநுபவம் இருக்கும். பேசும் போது சில புதிய செய்திகள் அவ்வப்போது தாமே வரும். அப்படி ஆண்டவனது பெருமை சமயத்துக்கு ஏற்ப அவ்வப்போது வெளிப் படும். அவனுக்கே தன் கருணையின் திறம் முழுவதும் தெரியாது. மேலே, இன்னும் முருகப் பெருமானுடைய பெருமையைச் சொல்ல வருகிறான் சிங்கமுகன். காண்பான், காட்சி, கண் ஆகிய மூன்றையும் திரிபுடி என்பார்கள். ஏதேனும் ஒரு பொருளைக் காண்கிறோம். காண்பதற்குரிய கருவியாக இருப்பது கண். காணுவ தாகிய தொழில் காட்சி. காணப்படும் பொருள் ஒன்று இருக்கிறது. இந்த மூன்றுக்கும் மேலே இந்தப் பொருள் இத்தகையது என்று காட்டுகிறவன் ஒருவன் வேண்டும். அப்படி அவன் காட்டாவிட்டால் நம்மால் காணமுடியாது. இறைவன்தான் எல்லாவற்றையும் காட்டுகிறான். மாயை என்னும் திறத்தினால் எல்லாவற்றையும் மறைக்கிறவன் அவன். பின்பு மாயையை எடுத்துவிட்டுக் காட்டு கிறவனும் அவன்தான். f குன்றாத மூஉருவாய் அருவாய் ஞானக் கொழுந்தாகி அறுசமயக் கூத்து மாடி நின்றாயே, மாயையெணுந் திரையை கி நின்னையார் அறியவல்லார்?* என்கிறார் தாயுமானவர். இவ்வாறு கருவி,காண்பவன், காட்சிப்பொருள், . படுபவன் என்ற நான்கு பொருளும் அவன்தான். நம் உடம்பில் உள்ள ஐந்து வகையாள இந்திரியங்களும் அவன்தான். புண்ணிய பாவம் என்று சொல்கிற வினைகளும் அவனே. காலம் இடம் ஆகிய இரண்டும் அவன் தான். எல்லாவற்றுக்கும் மேலான பலனாக் இருக்கிறவன் அவன். முருகப் பெருமானது இந்தத் தத்துவத்தைச் சிங்கமுகன் எடுத்துச் சொன்னாள். கருவி மெய்ப்புலன் காட்டுவான் காண்பவன் காட்சிப் பொருள்எ னப்படும் நான்மையும் ஐவகைப் பொறியும் இருதி றத்தியல் வினைகளும் காலமும் இடனும் மரபின் முற்றுறு பயனுமாய் நின்றனள் வள்ளல். (சூரன் அமைச்சியல். 180.) I கருவி - இந்திரியங்கள். புலன் - தன்மாத்திரை.]