382 கந்தவேள் கதையமுதம் களுக்கு அப்பாற்பட்டவன் பரம்பொருள். அவனை அடைந்தவர்கள் கால இட எல்லையைக் கடந்து நிற்பார்கள். சாடும் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே ஓடும் கருத்தை இருத்தவல் லாருக்குஉ கம்போய்ச் சகம்போய்" (கந்தர் அலங்காரம்) என்பார் அகுணகிரிநாதர். உகம் என்பதனால் காலத்தையும், சகம் என்பதனால் இடத்தையும் குறிப்பிக்கிறார்.கால், இட எல்லைகளைக் கடந்தவர்கள் இறைவனோடு ஒன்றி நிற்பார்கள். அந்தக் காலமாகவும் இடமாகவும் முருகப் பெருமான் இருக்கிறான் என்று சிங்கமுகன் சொன்னான். நீ ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கு அரசன் என்று எண்ணுகிறாயே. இந்த உலகத்தில் எத்தனையோ கோடி அண்டங் கள் இருக்கின்றன. எண்ணுவதற்கரிய அனந்த கோடியாகிய அண்டங்கள் அனைத்தையும் ஒருகணப் பொழுதில் ஆக்குவான் அவன். ஓர் இமைப்பொழுதில் மாற்றியும் விடுவான். அவன் உன்னோடு போர் பண்ண வேண்டுமென்று எண்ணி, அதனையே தன் திருவிளையாடலாகக்கொண்டு திருச்செந்தூருக்கு வந்திருக்கிறான்.' அன்ன வாகிய அண்டங்கள் அனந்தகோ டியையும் தன்னது ஆணையால் ஓர்இமைப் பொழுதினில் தரவும் பின்னர் மாற்றவும் வல்லதோர் ஆதியம் பிரான்காண் உள்னொ டேபொரும் ஆடலால் செந்திவந் துற்றன். (சூசன் அமைச்சியல் 186.) (தரவும்-படைக்கவும். ஆடலால் - திருவிளையாரனெல்.] இவ்வாறு மிக விரிவாக முருகப் பெருமானுடைய சிறப்பை எல்லாம் சிங்கமுகன் சொன்னான். மரணம் இல்லா வாழ்வு மேலும் சூரன், "நான் வச்சிர யாக்கை பெற்றவன்" என்று நிமிர்ந்து சொன்னானே, அதற்குப் பதில் தருகிறான். "நீ பல காலம் வாழ்வேன் என்று சொல்கிறாயே ; வச்சிர யாக்கை பெற்றிருக்கிற என் உடம்புக்கு அழிவில்லை என்கிறாயே; உலகத்தில் தோன்றியது எல்லாம் அழிந்துவிடும். தேவலோகத்தில் ஆகட்டும், பூ உலகத்தில் ஆகட்டும். உடம்பு எடுத்தவர்கள் இறந்து போவார்கள். இது நிச்சயம், வச்சிர யாத்சையை உடைய நீயும்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/402
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை