சுரப் போர் உடம்போடு இருப்பதனால், நிச்சயமாக அந்த உடம்பு அழிந்துவிடும்" என்று சொன்னான். பெருமை பெற்றிடு வானத்தின் நிலத்திடைப் பிறந்தோர் இருமை பெற்றிடும் காயமும் இறந்திடும் ; திண்ணம்; பருமி தத்துநின் வச்சிர யாக்கையும் பாரின் உரிமை பெற்றுளது ஆதலால் அழிவின்றி உறுமோ? (சூரன் அமைச்சியல்.138.) (இருமை - ஸ்தூலம், சூக்குமம், பருமிதத்து பெரிய அளவையுடைய உரிமை பெற்றது ஆதலால் - பிராகிருத சம்பந்தம் உடைமையால்.] பாரின் இங்கே ஒரு செய்தியை நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும். மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று ஒன்று சொல்வார்கள். எல்லோரும் மரணம் அடைய வேண்டும் என்றால் மரணம் இல்லாப் பெருவாழ்வு எப்படிச் சித்திக்கும் என்று கேட்கலாம். மரண ப்ரமாதம் நமக்கில்லையாம்; என்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலும் உண்டே" 21 என்பது சுந்தர் அலங்காரம். அந்தப் பாட்டில் மரணமில்லாத பெருவாழ்வு ஒன்று உண்டென்று தெரிகிறது. மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்” என்பார் அருட்பிரகாச வள்ளலார். அப்படியானால் இந்தச் சரீரம் மரணம் அடையாமல் என்றைக்கும் இருக்கக் கூடும் என்றுதானே சொல்லத் தோன்றுகிறது? ஆனால் உண்மை அது அன்று, பஞ்ச இந்தச் சரீரம் பஞ்சபூதங்களாலானது, பிரபஞ்சமும் பூதங்களாலானது. அகண்டமான பஞ்சபூதங்களிலிருந்து மிகச் சிறிய அளவுக்குப் பஞ்சபூதங்களை எடுத்து அம்பிகை இந்தச் சரீரங்களை ஆக்கியிருக்கிறாள். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு. பிரளயகாலத்தில் பஞ்சபூதங்கள் அழியும்.மூலமாகிய பஞ்சபூதங் களே அழிகிறபோது, அதிலிருந்து வந்த, பஞ்சபூதச் சேர்க்கையா லான உடம்புகள் அழியாமலா போகும்? நாம் வாழ்கிற காலத்தைவிட, அதிகமான அளவுக்கு, நூறு ஆண்டுகளுக்கு மேலே வேண்டுமானால் சித்த புருஷர்கள் வாழ்வார்கள். வச்சிர தேகம் என்றால் இன்னும் கொஞ்சம் அதிக ஆண்டுகள் இருக்கலாம். முடிவில் அதற்கும் அழிவு வந்து தீரும். அப்படியானால் மரணம் இல்லாத பெருவாழ்வு என்பது என்ன என்று கேட்கலாம்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/403
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை