பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 கந்தவேள் கதையமுதம் சென்னையின் சென்ட்ரல் ஜெயில் இருக்கிறது. அதிலிருந்து ஒரே சமயத்தில் இரண்டு கைதிகள் வெளி வருகிறார்கள். ஒருவர் சத்தியாக்கிரகம் செய்து சிறை சென்றவர். மற்றொருவன் திருடன். இருவரும் வெளியே வருகிறார்கள். என்றாலும் தேசத் தியாகிக்கு மாலை யிட்டு வீட்டிற்கு அழைத்துப்போக நான்கு பேர் வந்திருக்கிறார்கள். சிறையிலிருந்து வருகிற திருடனை இரண்டு பேர் காவலோடு அழைத்துப் போகிறார்கள். அவனைச் சேலம் ஜெயிலுக்கு மாற்றி அழைத்துப் போகிறார்கள். தியாகிக்கு விடுதலை என்றால், திரு னுக்குச் சிறைமாற்றம். அப்படி, நமக்கெல்லாம் மரணம் என்பது சிறைமாற்றம் போல்வது. இந்த உடம்பை விடுகிறோம். பிறகு வேறோர் உடம்பு எடுக்கிறோம். நமக்கு இறப்பும் பிறப்பும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சரீரத்தை விட்டவுடன் வேறு சரீரம் எடுக்கிறோம். அது சிறை மாற்றம் போன்றது. ஞானிகளோ பிராரப்தம் முடிந்தவுடன், சரீரத்தினின்று விடுதலை பெறுவார்கள். மக்கள் இறந்தால் காலமானார்கள் என்று சொல்வார் கள். ஞானிகள் இறந்தால் பரிபூரணம் அடைந்தார்கள் என்று சொல்வார்கள். அவர்கள் அடையவேண்டிய இடத்தை அடையது விட்டார்கள். இனிமேல் யாத்திரை இல்லை. அது நிறைவடைந்து விட்டது. நமக்கோ ஜீவ யாத்திரை தொடர்ந்து வருகிறது. ஆனால் மற்றோர் உதாரணம் பார்க்கலாம். திருநெல்வேலியிலிருந்து இரண்டுபேர் ரெயிலில் பயணம் செய்கிறார்கள். ஒருவர் விழுப்புரத்தில் இறங்கி வீட்டிற்குப் போகிறார். மற்றொருவர் அங்கே இறங்கிச் புதுச்சேரிக்கு வண்டி மாறிச் செல்கிறார். இருவரும் விழுப்புரத்தில் இறங்கினாலும் ஒருவர் பயணம் முடிந்துவிடுகிறது. மற்றொருவர் பயணம் இன்னும் தொடர்கிறது. அப்படி,நாம் இறந்தாலும் உடனே மறு பிறப்பு உண்டாவதால் நம் ஜீவப் பயணம் தொடர்கிறது. ஞானிகளுக்கோ ஜீவப் பயணம் முடிகிறது. ஒருவர் திருநெல்வேலியிலிருந்து முதல் வகுப்பில் வரலாம். இடையிலே வண்டி மாறிக் கிளை மார்க்கத்து ஊருக்குப் போக ஏறும் வண்டியில் முதல் வகுப்பு இல்லாமல் இரண்டாம் வகுப்பில் ஏறி அவதிப்படவும் நேரலாம். முதலில் கிளை மார்க்கத்தில் இரண்டாம் வகுப்பில் வந்தவர் பிறகு வண்டி மாறி முதல் வகுப்புப் பெட்டியில்