386 கந்தவேள் கதையமுதம் மகிழ்ச்சி. மற்றொருவன் இன்னும் கரும்பை வெட்டவில்லை. அதனால் தான் கதறி ஓடுகிறான். இதை நாலடியார் சொல்கிறது. கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயர்ஆண்டு உழவார்; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் காலன் வருங்கால் துயரம் இலர். இறைவனுடைய திருவருளினால் வினைகள் எல்லாம் போய் ஞானம் பெற்றவர்கள், இனிமேல் நமக்கு வீடு கிடைக்கும் என்ற எண்ணத் தினால் இந்த உடம்பை விடுவதற்குக் கவலைப்படமாட்டார்கள். 44 சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றினது தான்வந்து முற்றும் எனலால் சகமீ திருந்தாலும் மரணம்உண் டென்பதைச் சதாகிஷ்டர் நிணைவதில்லை." (தாயுமானவர் பாடல்) ஆகவே, சூரபன்மாவைப் பார்த்துச் சிங்கமுகன் சொன்னது மிகவும் உண்மை. உனக்கு வச்சிரகாயம் இருக்கிறது. என்று எண்ணுகிறாயே.இது அழியத்தான் போகிறது" என்று அறிவுரை பகர்ந்தான். 44 முருகப்பெருமானுடைய பெருமையை விளம்பரப்படுத்த வேண்டுமென்று இவ்வளவும் சொல்லவில்லை. உன்னிடத்திலுள்ள இரக்கத்தால் சொன்னேன். நீயும், உன் சுற்றமும் கேடு இல்லாமல் வாழ்வதற்காகச் சொன்னேன்” என்றான். கெடுதல் இல்லதோர் வளனொடு நீயும்நின் கிளையும் படுதல் இன்றியே, வாழ்திஎன்று இன்னை பகர்ந்தேன்; இடுதல் கொண்டிடு சிறையிடைத் தேவரை இன்னே விடுதல் செய்குதி என்றனன், அறிஞரின் மிக்கான். (சூரன் அமைச்சியல். 142.) [வளன்-போசு போக்கியங்கள். படுதல் - அழிதல், இடுதல் கொண்டு இடு சிறையிடை - வளிய இட்டு வந்து இடும் சுறையில் ] இங்கே சிங்கமுகனை 'அறிஞரின் மிக்கான்' என்று ஆசிரியர் சொல்கிறார். பொல்லாத அசுரக் கூட்டத்தில் இருந்தாலும் அவன் முருகப்பெருமானை நன்றாகத் தெரிந்துகொண்டு, "தேவர்களை விடுதலை
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/406
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை