கடவுள் வாழ்த்து 21 இப்போதெல்லாம் வேதத்தைப்பற்றிப் பலவகையான கருத்துக் களை மேடைகளில் பேசுகிறார்கள், தமிழருக்கும், வேதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்கிறார்கள். தமிழ் நாட்டிலேதான் வேதம் நன்றாக இருக்கிறது. பாரதியார், வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று பாடினார். பிற்காலத்தில் வந்தவர் ஆகையால் இப்படிப் பாடி யிருக்கிறார் என்று சொல்லலாம். இப்போது கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகவும் பழமையானவை சங்க நூல்கள். அந்த நூல்களை ஆராய்ச்சி செய்தால் அந்தக் காலத்தில் தமிழர்கள் வேதத்தை எப்படிப் பாதுகாத்தார்கள், பாராட்டினார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். ஓர் உதாரணம் சொல்கிறேன். மதுரை மாநகரில் சேர சோழ பாண்டிய நாட்டுப் புலவர்கள் ஒன்று சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சோழ காட்டின் தலை நகராக இருந்தது உறையூர். அதற்குக் கோழி என்று பெயர். சேர நாட்டின் தலைநகர் வஞ்சி. அந்தப் புலவர்களிடையே காலையில் எழுவதைப் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது சோழநாட்டுப் புலவர் சொன்னார்; "நாங்கள் முதல் கோழி கூவும்போதே எழுந்திருப் போம் என்றார், பெருமையோடு. வஞ்சி மாநகரப் புலவரும் அதையே சொன்னார். அப்போது பாண்டி நாட்டுப் புலவர் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு சொன்னார்; "நாங்கள் கோழி கூவி எழுவது இல்லை" என்றார். 'இவர்கள் அதற்குப் பிறகும் நெடு நேரம் படுத்து உறங்குவார்களோ!' என்று நினைத்தார்கள் மற்றவர்கள். அவர் தொடர்ந்து சொன்னார்; "எங்கள் நாட்டில் கோழி கூவுவதற்கு முன்பாகவே அந்தணர்கள் எழுந்து விடுவார்கள். எழுந்து வேத கானம் செய்வார்கள். அந்த வேதகானத்தைக் கேட்டு நாங்கள் எழுந்திருப்போமே தவிர, கோழி கூவி எழுந்திருப்பதில்லை" என்றார். பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்பு ஏம இன்துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாஅதெம் பேரூர் துலே, " 201 (பூவினுட் பிறந்தோன் - பிரமன். கேள்வி - சுருதி; வேதம். எடுப்ப - எழுப்ப.] இது பரிபாடல் என்ற சங்கநூலில் வருகிறது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை