பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 கந்தவேள் கதையமுத கதம்அறுக்கும் ; வதம்அறுக்கும் ; தூங்குபுழைக் கையறுக்கும் ; கபோலத்து ஊறும் மதம்அறுக்கும் ; நுதல்அறுக்கும் ; வாய்அறுக்கும்; செவிஅறுக்கும்; வயிரக் கோட்டின் விதம்அறுக்கும்; வால்அறுக்கும்; மெய்அறுக்கும்; தலை அறுக்கும்; வேழம் செல்லும் பதம்அறுக்கும்; முரண்அறுக்கும்; அரண்அறுக்கும், வீரன்னிடு பகழி மாரி. (முதல் நாள்.307.j (க்தம் - சினம். வதம்-பூண்ட விரதம். புழைக்வக -துதிக்கை. வயிரக்கோடு வயிரம் பாய்ந்த கொம்பு. முரண் - வலிமை.] வீரவாகு தேவர் விட்ட அம்புகள் அசுரர்களுடைய உறுப்புகளை அறுத்து எறிந்தன. மேலும் என்ன என்ன செய்தன என்பதைப் பாட்டே சொல்லும், நவவீரர்கள் எட்டுப் பேர்கள் மயங்கிவிழ, ஒன்பதாவதாக வந்த வீரவாகு தேவரின் போர்த் திறமையைக் கண்டு பானுகோபனே வியந்தான். மிகச் சிறந்த தலைவர்கள் தம்முடைய எதிரிகளானாலும் வீரர்களாய் இருப்பவர்களைப் போற்றுவார்கள் என்பதைக் காவியங்களில் காணலாம். இராமன் இராவணனது வீரத்தைப் புகழ்வதைக் கம்பராமாயணத்தில் பார்க்கலாம். அப்படி வீரவாகுவும் நினைத்தார் ; ' ஆண்மை என்பது இவனிடத்தில்தான் இருக்கிறது. உலகத்தில் வீரன் என்றால் இவன்தான். வேறு யார் இருக்கிறார்கள்?" என்று வியந்தார். நேருறு தனிவில் வாளி நின்றது நோக்கி நம்பால் சாருறும் அனிகம் எல்லாம் தடிந்தனன் இவன், என்று உன்னி, ஆரிடை அடங்கிற் றம்மா, ஆண்மைக்கும் அவதி உண்டோ? வீரன்மற்று இவனே அல்லால் வேறு இலை போலும் என்றன். (முதல் நாள்.318) (வாளி-அம்பு.அனிகம் படை. தடிந்தனன் - அழித்தாள். அவதி - எல்லை.] பானுகோபன் மோகாஸ்திரம் விடுக்க, வீரவாகு அமோகாஸ்திரம் விட்டார். வீரவாகு பாசுபதத்தை எடுத்தவுடன் பானுகோபன் மறைந்து அருவமாகிப் போனான். தம்முடைய தலைவனாகிய பானு