பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 கந்தவேள் கதையமுதம் வேதன் அஞ்சினன் ; மால்முடி துளக்கினன் ; விண்ணோர் நாதன் அஞ்சினன் ; மறலியும் அஞ்சினன் ; நடுங்கிக் கோதில் நல்லறம் அஞ்சின ; ஐவகை கொண்ட பூதம் அஞ்சின ; உயிர்த்தொகை அஞ்சின பொருமி. (இரண்டாக் நாள்.130) (வேதன் - பிரமன். துளங்தினன் - நடுங்கினாள். -ெ கலங்கி.) . நிகழ்ந்த போரில் 108 சேனாபதிகளும் அழிந்தார்கள். லட்சம் வீரர்களும் தோற்றனர். வீரவாகு தேவர் அல்லாத எட்டு வீரர் களும் தோற்றனர். கடைசியில் வீரவாகு தேவர் வந்தார். 'இவன் தான் தூதனாக வந்தான் போலும்!' என்று நினைத்துக் கொண்டான் சூரன். "முன்பு நீ வஞ்சகமாகத் தூதனாய் வந்தாய். இப்போதும் அப்படி வந்தாயானால் உய்வாய். வார்சிலை பிடித்து வந்தால் மாண்டாய். உன் கடைசி நாள் இதுதான் " என்று சூரன் சொன்னான். பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரிற் பன்னி ஒற்ற னாகியே இன்னும்வந் தாயெனின் உய்தி; மற்ற தேகடன்; வார்சிலை பிடித்தனை மாண்டாய்; இற்றை வைகலோ நின்னுயிர்க் கிழைத்தநாள் என்றான். { இரண்டாம் மற. 184.} [பட்டிகை பயிற்றி - வஞ்சகம் செய்து. அமைச்சரின் பள்னி - மந்திரியைப் போலப் பேசி. உய்தி -உயிர் பிழைப்பாய். வைகல் -நான்.] அதுகேட்டு வீரவாகு தேவர் சொல்லலானார்: "எம்பெருமான் திருவருளால் செயல் செய்கிறவன் நான். அவர் திருவுள்ளம் எப்படியோ அப்படியே நடப்பேன்.நான் தூதனும் ஆவேன். மந்திரி யும் ஆவேன். எதிர்க்கின்ற பகைவர்களிடம் வீரத்தைக் காட்டிப் போர் நிகழ்த்துவேன். எம்பெருமான் எந்த எந்தப் பணியைக் கொடுக்கிறானோ அவற்றை யெல்லாம் செய்வேன்.நீ போர் செய்ய வந்தால் போர் செய்" என்றார். தூதும் ஆகுவன் ; அமைச்சனும் ஆகுவன் ; துன்னார் மீது வெஞ்சமர் ஆற்றுவன்; இன்னமும் வேலோன் ஓதி டும்பணி யாவையும் செய்குவன்; உலகில் ஏதும் வல்லன்யான்; வேண்டுபோர் புரிதியால் என்றன். ( இரண்டாம் நாள்.185.) [தூது - தூதுவன். துன்னார் - பகைவர். சமர் - போர்.பணி - வேலை.]