பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் 399 தேவர் விட்ட அஸ்திரங்கள் பானுகோபனிடம் இருந்த எல்லாப் படைகளையும் அழித்தன. அப்போது அவன் ஆகாயத்திற்குச் சென்றான். மற்றவர்கள் ஓடிப் போனார்கள். ஆகாயத்திலிருந்தே மாயை கொடுத்த மாயா அஸ்திரத்தைப் பானுகோபன் விட்டான். அது எல்லோரையும் உணர்வழியச் செய்து ஏழு கடலுக்கும் அப்பால் அவர்களைக் கொண்டு போய்ச் சிறை செய்தது. அவர்களை அங்கிருந்தே காவல் செய்தது. போயது சூரன் மைந்தன் புந்தியிற் கதிமேற் கொண்டு மாயிரு நேசி ஆறும் வல்லையில் தப்பி அப்பால் தூயதெண் புனலாய் ஆன்ற தொல்கடல் அழுவம் நண்ணி ஆயவர் தொகையை இட்டே அகன்றிடாது ஓம்பிற் றன்றே. (மூன்றாம் நாள்.187.) (சூரன் மைந்தன் புந்தியின் -பானுகோபனுடைய மனத்தைப் போல. நேமி - கடல், வல்லையில் - விரைவில். அழுவம் - பரப்பு.) பானுகோபன் எல்லோரும் போனது கண்டு மமதையோடு தன் தந்தையிடம் சென்று தன் வீரப் பிரதாபங்களைக் கூறினான். அப்போது நாரதர் முருகப்பெருமானை அடைந்து யுத்த களத்தில் நடந்த வரலாற்றைச் சொன்னார். முருகன் தன் திருக் கரத்தில் இருந்த வேலைப் பார்த்து, 'அவர்களைக் கொண்டு சென்ற மாயா அஸ்திரத்தை அழித்து வீரர்களுடைய மயக்கத்தைப் போக்கி அவர்களை மறுபடியும் இங்கே வரும்படி செய்ய நீ செல்வாயாக" என்றான். கங்கை அன்னதோர் வாலிதா கியபுனற் கடற்போம் ஆங்கண் வைகிய மாயமாய் படையினை அழித்து வெங்கண் வீரர்மால் அகற்றியே, அனையவர் விரைவில் இங்கு வந்திடத் தந்துநீ செல்கென இசைத்தான், (மூன்றாம் நாள். 186.) [வாவிதாகிய புனற் கடல் - தூய நீருள்ள கடல் மாயமாப்படை - மாயாஸ்திரம். மால்- மயக்கும்.] வேல் வெகு வேகமாக அங்கே சென்றது. அருணோதயத்திற்கு முன்னால் இருள் அகன்றாற்போல அது போவதற்கு முன்னே மாயப்