பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் வீரவாகு தேவர் நகரை அழித்தல் 405 வீரவாகு தேவர் வீரமகேந்திரபுரத்து மேற்கு வாசல் வழியே உள்ளே நுழைய முயன்றார். அங்கே இருந்த புலிமுகன் எதிர்த்துப் போரிட்டான். வீரவாகு தேவருடன் சென்ற சிங்கன் அந்தப் புலி முகனைக் கொன்றான். வீரவாகு தேவர் ஆக்கேயாஸ்திரம், வாய் வாஸ்திரம் ஆகிய இரண்டையும் சேர்த்து விட்டார். அக்கினியும், வாயுவும் சேர்ந்தால் எப்படி இருக்கும் ? ஒரு வீட்டில் தீப்பற்றுகிற போது, காற்று வந்தால் மிக விரைவில் வீடு எரிந்து விடும். வீரவாகு தேவர் இரண்டு அஸ்திரங்களையும் சேர்த்து விட்டவுடன் அந்த நகர் அழிந்தது. அப்போது சூரபன்மன் எல்லா மேகங்களையும் வரவழைத்தான். வீரவாகு தேவரின் அனல்படையின் வெம்மை பொறுக்காமல் அவைகள் சிதறி ஓடின. அங்கங்கே மழையாகப் பொழிந்து நெருப்பை அவித்தன. அப்போது சூரன் தன் மகன் இரணியனை அழைத்தான். அவனுக்கு மூன்று தலைகள். அவனைப் போருக்குச் சென்று பகைவர்களை அழித்து வரச் சொன்னான். இரணியன் கூறுதல் தேவர்களை நாம் இரணியன் நல்ல அறிவு உடையவன். சிறையிலிருந்து விடாவிட்டால் கேடு வரும். நம் செல்வம் எல்லாம் போய்விடும்" என்று சூரனிடம் சொன்னான். முன்பு என்ன என்ன நிகழ்ந்தன என்பதை அவன் தெரிந்து வைத்திருந்தான். "முருகன் திருக்கரத்திலுள்ள வேல் தாரகனைக் கொன்றது. கிரவுஞ்ச மலையைத் தூளாக்கியது. ஏழு சமுத்திரத்திற்கு அப்பால் இருந்த வீரர்களை மீட்டுக் கொண்டு வந்தது. அந்த வேலைப் போற்றி, எம்பெருமானின் திருவடியைப் பணிவதன்றி, அவனோடு போர் செய்வோம் என்று எழுவது அறிவுடை ஒருவன் செய்கிற காரியம் அன்று ” என்று இரணியன் சொன்னான். தாரகற் செற்ற தென்றால் தடவரை பொடித்த தென்றால் வார்புனற் கூடலுள் உய்த்த வலியரை மீட்ட தென்றால் கூருடைத் தனிவேல் போற்றிக் குமான்தாள் பணிவு தல்லால் போரினைப் புரிதும் என்கை புலமையோர் கடன தாமோ? (இரணியன் யுத்தம்.32.) [தடவரை - விசாலமான கிரௌஞ்சமலையை, பொடித்தது - பொடியாக்கியது. புலமையோர் - அறிவுடையவர்.]