பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாசுரப் போர் 409 இங்கே எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்திரஜித் இறந்தபோது தேவர்கள் எல்லாம் அதைக் கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். தம் இடையில் இருந்த ஆடைகளை எடுத்து வீசினார்கள். அது எப்படி. இருந்தது? கொல்லாத நோன்புடைய செனர்களின் தெய்வங்களாகிய தீர்த்தங்கரர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருந்தனர் என்று கம்பர் அங்கே வருணிக்கிறார். வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளித லோடும் செல்லாதவ் விலங்கை வேந்தற்கு அரசெனக்களித்த தேவர் எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது கொல்லாத விரதத் தார்தம் கடவுளர் கூட்டம் ஒத்தார்." இங்கே பிறந்த மேனிக்கு இருந்தார்கள் என்று கச்சியப்பர் சொல்கிறார். உணர்ச்சி மிகுந்தால் அறிவு மறைந்துவிடும். 'நாம் இப்படி இருக்கிறோமே; பிறர் பார்த்தால் பரிகாசம் பண்ணுவார். களே!' என்று எண்ணாமல், நாணத்தைத் துறந்து, உணர்ச்சி வசப்பட்டு ஆடைகளை எல்லாம் அவிழ்த்து வீசி ஆடினார்கள், தேவர்கள் எல்லாம். தம்பிமார்கள் இறந்த செய்தியைத் தூதுவர்கள் முருகப் பெரு மானிடம் போய்ச் சொன்னார்கள். அவன் ஓர் அம்பில் மடல் தீட்டி, 'என் தம்பிமார்கள் உயிரைக் கொண்டுவந்து அவரவர்களது உடலில் சேர்க்க வேண்டும்' என்று எமனுக்கு அனுப்பினான். எம்பெருமான் உத்தரவிட்டபடியே எமன் செய்தான்; நவவீரர்கள் உடலில் உயிரைச் செலுத்தி அவர்களை எழுப்பினான். புக்க காலையின் எழுவரும் தம்உடல் புகுந்தார் மிக்க பாரிடத் தலைவர்கள் யாவரும் விரைவில் தொக்கு வீழ்தரும் யாக்கைகள் உற்றனர் ; கார்கள் அக்க ணந்தனிற் பூமழை தூவிநின்று ஆர்த்தார். (அக்கினிமுகாசுரன். 221.) (பாரிடத் தலைவர்கள் - பூதகணத் தலைவர்கள்.] இந்தச் செய்திகளை அறிந்த சூரன் அழுது புலம்பினான். போருக்கு மூவாயிரம் புதல்வர்களை அனுப்பினான். அவர்களும் அழிந்து விட்டார்கள். அதனால் மேலும் மேலும் அவன் துன்பத்தை அடைந்தான். நான்காவது நாள் இரவு தருமகோபன் வந்தான். அவன் புண்டரிகம் என்னும் யானையின்மேல் ஏறிப் போர் செய்தான். அந்த யானையும் அழிந்தது; அவனும் அழிந்தான். 52