பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் வாழ்த்து திருவத்த தொல்லைப் புவளத்தொடு தேவர் போற்றிப் பெருவந் தனைசெய் தறிதற்கரும் பெற்றி எய்தி அருவந் தனையும் உருவத்தையும் அன்றி தின்ருன் ஒருவன் தனது பதந்தன்னை உளத்துள் வைப்பாம். (தொல்லை-பழமையான.] 23 (கடவுள் வாழ்த்து. I.) ஆண்டவன் அருவமாகவும், உருவமாகவும் இருக்கிறான்; அவ் விரண்டும் அல்லாமல் இருக்கிறானாம். அருவந் தனையும் உருவத்தையும் அன்றி நின்றான். அருவத்தையும், உருவத்தையும் அல்லாமல் இருக்கிறான் என்று சொல்வதில் ஓர் ஐயம் பிறக்கிறது. ஒன்று அருவமாக இருக்க வேண்டும்; அல்லது உருவமாக இருக்கவேண்டும். இரண்டும் அல்லாதது எது என்ற கேள்வி பிறக்கும். . இறைவன் அருவமாக இருக்கிறான்; உருவமாக இருக்கிறான்; அரு உருவமாகவும் இருக்கிறான்' என்று சாத்திரம் சொல்கிறது. சிவலிங்கம் அருவுருவம் என்று சொல்கிறார்கள். சிவலிங்கம் சிவலிங்கத் தத்துவத்தைப்பற்றி இப்போது பலர் பலவித மாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கன். மேல்நாட்டினர் அதற்கு அருவருப்பான பொருள் சொல்கிறார்கள். அதைக் கண்டு நம்மிடை யேயும் சிலர் அப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இங்கே சற்று ஆராயலாம் என்று நினைக்கிறேன். நாம் பார்க்கின்ற சிவலிங்கம் அருவுருவம் என்று சொல்கிறார் கள். கண்ணில் தெரிகிற எல்லாமே உருவந்தானே? உருவம், வடிவம் என்று இரண்டு. உண்டு. உருவம் என்பது ஃபார்ம் (form); வடிவம் என்பதனை ஷேப் (sbape) என்பர். சிவலிங்கத் திற்கு 'ஷேப்' இல்லையே தவிர, ஃபார்ம்' உண்டு. ஆயினும் அதை உருவமற்றது என்று சொல்கிறார்கள், அப்படிச் சொல்வது பொருத் தமாக இராது. கண்ணில் காணுகிற எல்லாமே உருவந்தான். நாம் இப்போது கோயிலிலுள்ள நடராஜரைப் பார்க்கிறோம். அந்த நடராஜர் சாட்சாத் நடராஜர் அல்ல; அதாவது பதஞ்சலி. வியாக்கிரபாதருக்குக் கோலம் காட்ட எழுந்தருளிய மூர்த்தி அல்ல