பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பானுகோபன் வதை 411 அவர்களை எல்லாம் அழித்து விடுகிறது. அது போலத் தேவர்களைத் துன்புறுத்தி வந்த நாம் முருகப் பெருமான் கணையால் தொலைந்து விடுவோம்" என்று அவன் சொன்னான். புல்லி தாகிய விலங்கினைப் படுப்பலர், புதலுள் வல்லி யந்தனக்கு உண்டியாய் மாய்ந்திடும் கதைபோல் எல்லை இல்பகல் ஆமரரை அலைத்திடும் யாமும் தொல்லை தாள்வலி சிந்தியே, குமரனால் தொலைந்தோம். ( பானுகோபன்16. [புல்லிதாகிய விலங்கினை - அற்ப மிருகங்களை படுப்பவர் - கொல்பவர். புதல்- புதர். வல்லியம் - புலி. எல்லை -அளவு. அலைத்திடும் - துன்புறுத்தும். நாம் நம்முடைய ஆற்றலின் அளவைத் தெரிந்துகொள்ளவில்லை. ஊக்கத்தினால் அளவிற்குமேல் போய்விட்டோம்" என்று அவன் பேசினான். வள்ளுவர் ஒரு குறள் சொல்கிறார்.

  • நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயிர்க்கிறுதி யாகி விடும். " தன்னுடைய பலத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு, எந்த அளவுக்கு அதைப் பயன்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்குப் பயன் படுத்த வேண்டுமே தவிர, முன்னாலே கிடைத்த சிறு வெற்றிகளை வைத்து, கர்வம் பெற்று மேலும் மேலும் அளவுக்கு மிஞ்சிப் போனால் உள்ள பலங்கள் எல்லாம் போய்விடும்' என்று அந்தக் குறள் சொல்கிறது. பானுகோபன் சூரபன்மாவுக்குச் சொன்ன அறிவுரையில் அந்தக் கருத்துக்கள் இருக்கின்றன. "மிருகங்களைக் கொன்று விட்டோம் என்ற செருக்கில் இருந்த போது வேடனைப் புலிகொல்வது போல, முருகன் நம்மை அழித்துவிடுவான்" என்றான். "இப்போதே மிக்க ஆற்றலுள்ள புதல்வர்களை நீ இழந்து விட்டாய். நான்கு வகையான சேனையை இழந்து கொண்டு வருகிறாய். நானும் நியுமே மிஞ்சியிருக்கிறோம். எல்லோருக்கும் மேலாக இருந்த உன் குலத்தையே வேரோடு அழிக்கக் கூற்றுவனைப் போல வந்துள்ள முருகப் பெருமானை நீ தெரிந்து கொள்ளவில்லை. இன்னமும் பகை உணர்ச்சி கொண்டு சண்டையை மேற்கொண் டிருக்கிறாய். "