பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பானுகோபன் வதை 413 மூர்க்கனும், முதலையும் கொண்டது விடா அதனால் மேலும் மேலும் பல துன்பத்தையே அடைவார்கள். சூரன் சினந்துரைத்தல் பானுகோபன் அநுபவத்தால் தான் உணர்ந்த நல்வழியை எடுத்துரைத்தான். அதைக்கேட்ட சூரனுக்குக் கோபம் வந்துவிட்டது. "நீ என்ன சொல்கிறாய்? என் பிள்ளையாகிய நீ இப்படி எதிர்த்துப் பேசலாமா? நான் எனியனாகி, தேவர்களைச் சிறையி லிருந்து நீக்கிவிட்டால் அரசர்களுக்கு அரசன் என்று என்னை உரைக்கின்ற பதவி என்ன ஆகும்? என்னை யார் மதிப்பார்கள்? அதோடு எனக்கு அழியாப் பழியும் வந்துவிடாதா?" என்றான். என்இவை உரைத்தாய் மைத்த? இன்றுயான் எளியன் ஆகிப் பொன்உல குள்ள தேவர் புலம்புகொள் சிறையை நீக்கின் மன்னவர் மன்னன் என்றே யார்எனை மதிக்கற் பாலார் ? அன்னதும் அன்றி, நீங்கா வசையும்வந்து அடையும் மாதோ. (பானுகோபன், 28.) (பொன் உலகு - தேவலோகம். புலம்புகொள் - தனித்திருக்கும், வருந்தும்.] "என் இவை உரைத்தாய் மைந்த" என்று சொல்லும்போது, தந்தையிடத்தில் இப்படிப் பேசுகிறாயே, இப்படிப் பேசலாமா என்ற குறிப்பு இருக்கிறது. அதோடு தன் பதவிக்கு ஏதோ கௌரவம் இருப்பதுபோலவும், அது அழிந்து விடுவது போலவும் பேசினான், "மன்னவர் மன்னன் என்றே யார் எனை மதிக்கற் பாலார்?" என்று கேட்டான். கூன், செவிடு,முடம், குருடு, ஊமை என்பனபோன்ற குறை யோடு உடம்பு இருந்தால் அவை உடம்போடு போகும். ஆனால் மானம் போய்விட்டால் உலகத்தில் இந்த உடம்பு போனாலும் கூட அந்தப் பழி நிற்கும் அல்லவா ? இதை நீ தெரிந்து கொள்ள வில்லையே