பானுகோபன் வதை 415 உயர்ந்த மானத்தைப் பற்றிப் பேசாமல், தாம் கொண்ட கொள்கை பெரிய கொள்கைபோலவும், அது அழிந்தால் மானம் போய்விடுவதுபோலவும் பேசுகிறான். பொல்லாதவர்கள் சிறந்த நீதியைத் தமக்கு மேற்கோள் காட்டுகிற பான்மையை தெரிவிக்கிறது. இது அவன் மேலும் சொன்னான்: "மைந்த,நீ அவர்களைக் கண்டு அஞ்சிவிட்டாய் போலிருக்கிறது, நான் போகிறேன் சண்டைக்கு. நீ பயப்படாதே. நீ உன்னுடைய அரண்மனைக்குப் போய்ச் சுகமாகத் தூங்கு. 33 அஞ்சினை போலும் மைந்த; அளியநின் இருக்கை போகித் துஞ்சுதி; துஞ்சல் இல்லா வரத்தினேன் தொலைவது இல்லை; நெஞ்சிடை இரங்கி யாதும் நினையலை; நேர லார்மேல் வெஞ்சமர் புரியப் போவேன்; என்றனன் வெகுளி மேலான். பானுகோபன்.29.) [அளிய - அன்பை உடைய. துஞ்சுதி - தூங்கு, துஞ்சல் இல்லா -அழிவில்லாத நேரலார் - பகைவர்.] பானுகோபன் கூற்று பானுகோபன் அதைக் கேட்டான். 'இனி எத்தனை சொன்னா லும் இவனுக்கு உய்வில்லை. விதியை யாரால் வெல்ல முடியும்? விதி எப்படித் தள்ளுகிறதோ அதற்கேற்றபடி செய்வோம்' என்று எண்ணித் தன் தந்தையைப் பார்த்துச் சொல்லலானான். "அப்பா, நான் சிறிதும் அறிவு இல்லாதவன். நான் சொன்ன வார்த்தைகளை நீ மனத்தில் கொள்ளக் கூடாது. தயை செய்து பொறுத்துக் கொள்ள வேண்டும். சின்னப் பிள்ளைகள் ஏதாவது சொன்னால் முதுமை உடையவர்கள் அதைக் கண்டு சிரிப்பார்களே யல்லாமல் கோபிக்க மாட்டார்கள் " அறிவொருசிறிதும் இல்லேன்; அடியனேன் மொழிந்த தீமை டாய்; இறையதும் உள்ளம் கொள்ளாது எந்தைத் பொறுத்தி கண்டா. சிறியதோர் பருவப் பாலர் தீமொழி புகன்ற ரேனும் முறுவல்செய் திடுவ தன்றி முனிவரோ மூப்பின் மேலோர்? (பாலுகோபள்.91.) [தீயை - தீய சொற்கள். இறையதும் - சிறிதளவும்.)
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/435
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை