416 கந்தவேன் கதையமுதம் "ஆகவே" என்னை நீ பொறுத்தருள வேண்டும்" என்று சொல்லி அவன் போருக்குப் புறப்பட்டான். பானுகோபன் போர் போர்க்களத்திலே அவனுடைய வீரச் செயலைத் தாங்கமாட்டாது பூத கணங்கள் எல்லாம் ஓட்டம் எடுத்தன. வீரவாகு தேவர் பானு கோபனை எதிர்க்க முன் வந்தார். இருவரும் மாறி மாறி வெவ்வேறு படை தொடுத்தனர். அப்போது பானுகோபன் ஒரு மந்திரத்தைச் சொல்லி, வானத்தில் தேரோடு மறைந்து போனான். விஞ்சை மாய வியன்முது மந்திரம் நெஞ்ச மீது நெறிப்பட எண்ணியே செஞ்சு டர்க்கதி கைச்சிறை செய்திடு வஞ்ச மைந்தன் மறைந்தளன் தேரொடும். பானுகோபன்.100.) [விஞ்சை மாய வியன்முது மந்திரம் - வித்தையாகிய மாயமான பெரிய பழைய மந்திரம்.] அவன் மாயமாக மறைந்து போனதைக் கண்ட வீரவாகு தேவர் ஞானாஸ்திரத்தை விட்டார். அப்போது எங்கும் கப்பிக் கொண்டிருந்த இருள் மறைந்து விட்டது. அவன் செய்த மாயம் அழிவு பெற்றது. தேரும் தானுமாக வந்து நின்றான். பொருவரும் திறலோன் விட்ட போதகப் படையே பானாள் இருளினை இரியல் செய்யும் ரவிபோல் சேற லோடும் விரைவொடு விஞ்சை மாயம் விளிந்தது : வேந்தன் மைந்தன் ஒருபெருந் தேரும் தானும் ஆகியே உம்பர் நின்றான். பானுகோபன்.108.) [பொருவரும்-ஒப்பற்ற, போதகப் படை - ஞானுாஸ்திரம். பானாள் இருளினை பாதிராத்திரி இருட்டை, இரியல் செய்யும் - ஓடச் செய்யும். இரவிபோல் - சூரியனைப் போல. விஞ்சை மாயம் - மந்திரத்தால் உண்டான மறைப்பு. விளிந்தது - நீங்கியது.] வீரவாகு தேவர் ஞானாஸ்திரத்தை விட்டவுடன் பானுகோபன் மாயம் அழிந்ததை இங்கே நாம் காண்கிறோம். இவை எல்லாம் ஒரு குறிப்பை உடையன. மாயம் என்பது அறியாமைக்கு மூல காரணம். அறியாமை என்பது இருள் போன்றது. அதனால் பொருளே - i
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/436
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை