பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பானுகோபன் வதை 419 அழியும்போது இந்த முறை மாறாக இருக்கும். மமகாரம் போய்க் கடைசியில் அகங்காரம் போகும். எனது இங்கே சூரபன்மன் அகங்கார சொரூபம். அவனுடைய தம்பி மார்கள், பிள்ளைமார்கள் எல்லாம் மமகாரங்கள். யான், என்பதை அகப்பற்று, புறப்பற்று என்று சொல்வார்கள். இந்த இரண்டும் அழிந்தால்தான் நலன் உண்டாகும். முருகப் பெருமான் அவன் மமகாரங்களை எல்லாம் அழித்துக் கொண்டு வருகிறார். பின்பு அகங்காரமாகிய அவனை அழிக்கப் போகிறார். உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற என்னை இழந்தநலம் சொல்லாய்முரு காசுர பூபதியே " (கந்தர் அநுபூதி) என்று சொல்வார் அருணகிரியார். எல்லாம் என்பதற்கு எனது என்று சொல்கிற மமகாரம் யாவும் என்பது பொருள். என்னை இழந்த நலம்' என்பது அகங்காரத்தை விடுவதைச் சொல்வது. "யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் என்று வள்ளுவர் சொல்கிறார். சூரனுடைய ஒன்றாகிய பானுகோபன் இப்போது அழிந்தான். மமகாரங்களில் வீரவாகு தேவர் தம்முடைய படைகளாகிய துணைவர்களோடு பாசறைக்குச் சென்று முருகப் பெருமான் திருவடிகளைப் பல முறை வணங்கினார். சோதி நீடிய பாசறை புகுந்திடு தூயோன் பூதர் தம்மொடும் துணைவர்கள் தம்மொடும் போந்து காத லாகியே அறுமுசுத் தையனைக் கண்டு பாத பங்கயம் தன்னிடைப் பன்முறை பணித்தான். (urgeruar. 151.) செய்வதாகச் சொன்ன காரியத்தைச் செய்து முடித்தவர் அல்லவா வீரவாகு தேவர்? செய்வினை முடித்த செம்மல் உள்ளம்" என்று சங்ககால நூல்களில் வரும், அப்படி, தாம்