பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கந்தவேள் கதையமுதம் அந்தப் பெருமானின் அறிகுறியே அந்த வடிவம். சிவபெருமான் நடராஜராகத் தாண்டவமாடிய கோலத்தைக் காட்டும் பிம்பம் அது. அதேபோல் நாம் காணுகிற சிவலிங்கம் அருவுருவத்தைக் காட்டு கின்ற பிம்பம். மூலமாக உள்ள அருவுருவத்தைக் காட்டுவது கோயிலிலுள்ள சிவலிங்கம். இந்த லிங்கத்தையே அருவுருவம் என்று சொல்லக்கூடாது. அது அருவுருவத்தைக் குறிக்கும் அடையாளம். தட்சிணாமூர்த்தி கோயிலில் எழுந்தருளியிருக்கிறார். தென்முக மாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் பண்ணின மோன ஞானத் தவக்கோலத்தைக் காட்டுகின்ற வடிவம் அது. மூலப்பொரு ளாகிய தட்சிணாமூர்த்தியின் பிரதிபிம்பமாக அது இருக்கிறது. அதே போல் எழுந்தருளியிருக்கிற சிவலிங்கங்கள் எல்லாம் அருஉருவம் ஆகா; மூலமான அருவுருவத்தை நினைப்பூட்டு கிற சின்னம் அவை. திருக்கோயிலில் அப்படியானால் மூலமாகிய அருவுருவம் எது? நடராஜரின் திருவடிவைப் பார்க்கும்போது பதஞ்சலி, வியாக்கிரபாதருக்கு நினைத்துக்கொள்கிறோம். நடனம் காட்டிய மூலத்திருவுருவத்தை அதனை அறிகுறியாகக் காட்டுகின்றது இந்த வடிவம். அதுபோல இந்தச் சிவலிங்கம் எந்த மூலப்பொருளை நமக்குக் காட்டுகிறது? திருமூலர் அந்த உண்மையை விளக்குகிறார். நாம் ஒரு மாடியின் மேலே படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வானம் முழுவதும் வளைந்து அரை வட்டமாகப் பூமியில் கவிழ்த்து வைக்கப்பட்ட மரக்காலைப்போல இருக்கிறது. சுற்றிலும் வான விளிம்பு தோன்றுகிறது. இந்த அரை வட்டமே லிங்கம், அதைத் திருமூலர் அண்டலிங்கம் என்று சொல் கிறார். அதற்குப் பீடமாகிய பூமியே ஆவுடையார். அண்டலிங்கத்தைத் தாங்குகிற சக்தியாக இந்த பூமி இருக்கிறது. இந்த அண்டலிங்கத்திற்கு யார் பூசை பண்ணுவது? அபிஷே கம் செய்பவர் யார்? மழைதான் இந்த அண்டலிங்கத்திற்கு அபி ஷேகம் செய்கிறது. திருமஞ்சன நீர் வைத்திருக்கிற இடம் கடல். அங்கிருந்து மேகங்கள் நீரை மொண்டு வந்து மழையாக அபிஷேகம் செய்கின்றன. பூமியாகிய ஆவுடையாரின்மேல் உள்ள வானமாகிய