420 கந்தவேள் கதையமுதம் சொன்ன சபதத்தை நிறைவேற்றி வந்த வீரவாகு தேவரிடம் அகங்காரம் எதுவும் இல்லை. எல்லாம் முருகப் பெருமான் திருவருளால் நடந்தன என்ற எண்ணத்தோடு அவன் திருவடியை வணங்கினார். அப்போது முருகப் பெருமான் அவரைப் பார்த்துப் பேசினான். "சூரன் மகனோடு போர் செய்து மிகவும் நீ அல்லல்பட்டாய். எவ்வளவோ ஆற்றலுள்ள அவனை நி மிகவும் வருந்தி அழித் திருக்கிறாய். அதனால் நாம் திருவுள்ளம் மகிழ்ந்தோம். உனக்கு என்ன வேண்டும்.கேள்" என மிக்க மகிழ்ச்சியோடு முருகன் சொன்னான். பரிந்து பன்முறை வணங்கியே எழுதலும், பகவள் தெரிந்து நோக்கிநீ சூர்மக ணேடுபோர் செய்து வருந்தி ஆங்கவற் செற்றனை; ஆதலின் மகிழ்த்தாம்; விரைந்து கேண்மதி; நல்குதும் வேண்டுவது என்றன். (பானுகோபன்.152 ) (பகவன் - முருகன். செற்றனை அழித்தாய். கேண்மதி-கேள்.] வீரவாகு வேண்டுதல் . வீரவாகு தேவர் என்ன கேட்டிருப்பார் ? நாமாக இருந்தால், பெரிய பதவி வேண்டும், பணம் வேண்டுமென்று கேட்டிருப்போம். அவர் அவ்வாறு கேட்கவில்லை. "எம்பெருமாளே, எனக்குப் பெரிய பதவிகள் வேண்டாம். குபேரனுடைய வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இந்திரன் அரசினைக் கனவிலும் விரும்பமாட்டேன். திருமால் பதவியும், பிரமன் பதவியும் வேண்டேன்." கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக் கொண்டே வந்தார். "பின்னே என்ன வேண்டுமென்றால், உன் பதத்தில் என்றும் மாறாத அன்பை வேண்டு கின்றேன் தமியேன்" என்று சொன்னார். கோலம் நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன் மேலை இந்திரன் அரசினைக் களவிலும் வெஃகேன் ; மால்அ யன்பெறு பதத்தையும் பொருளென மதியேன்; சால நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியேன். (பானுகோள்.154.) [கோலம் - ஆடம்பரம், நிதிபதி - குபேரன். குறியேன் -அடைய எண்ணமாட் டேன்' வெஃகேள் · விரும்பமாட்டேன்.பதத்தையும் - பதவியையும்.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/440
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை