பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பானுகோபன் வதை 421 மனிதர்கள் முதலில் பணத்தை விரும்புவார்கள். பணம் இருந்தால் பதவியை விரும்புவார்கள். அதிலும் கவனர் பதவியை விரும்புவார்கள். அது கிடைத்துவிட்டால் ராஷ்டிரபதி பதவியை விரும்புவார்கள். மனிதனுக்கு வர வர ஆசை மிகுதியாகும். ஆசைப்படுகிறவன் ஆசைப்படும் பொருளை அடைந்துவிட்டால், அதற்குமேலே ஆசை தோன்றாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் ஆசையின் தன்மை அத்தகையது அன்று. ஆசையைப் பொருளால் அழித்துவிடுவது என்பது, நெருப்பை நெய்யினாலே அவித்து விடலாம் என்று நினைப்பது போன்றது என்று வள்ளுவர் சொல்கிறார். று ஆகவே, உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டவுடன் வீரவாகு தேவர், "எனக்குப் பணம் வேண்டியதில்லை. பணத்திற்கு அதிபதியாகிய குபேர பதவி வேண்டாம். அதற்குமேல் பெரிய பதவி இந்திர பதவி; அந்த அரசாட்சியையும் வேண்டேன். அதை விடப் பெரிய பதவி பிரமபதவி, திருமால் பதவி : அவையும் வேண்டாம். வேண்டுவது உன் திருவடிக்கண் நிலைத்து இருக்கும் அன்புதான்" என்று சொன்னார். அடியார் இயல்பு சேக்கிழார் பெரிய புராணத்தில் அடியார்களின் தன்மையைச் சுருக்கமாகத் திருக்கூட்டச் சிறப்பு என்ற தலைப்பில் சொல்கிறார். தொண்டர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களிடத்திலுள்ள ஐசுவர்யத்திற்குச் சமானம் வேறு எதுவும் இல்லை. உலகத்திலுள்ள பணத்திற்கு லாப நஷ்டம் உண்டு; கேடு, ஆக்கம் உண்டு. ஆனால் அவர்களிடத்திலுள்ள ஐசுவர்யத்திற்குக் கேடும் ஆக்கமும் இல்லை. "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ; ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்." ஓட்டையும், பொன்னையும் ஒன்றாகவேதான் பார்ப்பார்கள் என்கிறார் சேக்கிழார். ஓடும் செம்பொன்னும் என்பதற்குப் பதில் பொன்னும் ஓடும் என்று மாற்றிப் போட்டால் பொருள் வேறாகிவிடும். ஓட்டைப் பார்த்து அது பயன்படாது என்று ஒதுக்குவது போலப் பொன்னைப் பார்த்து அதையும் ஒதுக்குவார்களாம்.