422 கந்தவேள் கதையமுதம் பொன்னையும் ஓட்டையும் ஒக்கவே நோக்குவார்' என்றால் பொன் பயன்படும் என்று சேமித்துக் கொள்வதைப் போலவே, ஓட்டையும் எதற்காவது பயன்படும் என்று சேமித்துக் கொள்வார் கள் என்று பொருள்பட்டு விடும். ஆகவேதான் முன்னால் ஓட்டைச் சொல்லி, பின் செம்பொன்னைச் சொன்னார் என்று "கூடும் அன்பினில் கும்பிட லே அன்றி வீடும் வேண்டா விறவின் விளங்கினார்" பாடுகிறார். மோட்ச சாம்ராஜ்யம் கூட அவர்களுக்கு வேண்டியதில்லையாம். இறைவனிடத்தில் அன்பு ஒன்றே போதும். பரிபாடலில் இந்தக் கருத்து வருகிறது. "துன்னித் துன்னி வழிபடு வதன்பயம் இன்னும் இன்னும் அவை ஆகுக. 37 'கூன்னை மீட்டும் மீட்டும் அடைந்து வழிபடுவது. அதற்கு அப்பால் ஒரு பயனைக் குறித்தன்று ; மீட்டும் மீட்டும் இப்படியே வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்' என்று புலவர் முருகனைப் பார்த்து வேண்டுகிறார். மிக உயர்ந்த பக்குவம் உடைய தொண்டர்கள் வேறு எந்தப் பதவியையும் வேண்டமாட்டார்கள். இறைவனுடைய அடியாராக இருந்து தொண்டு செய்யவேண்டுமென்றே அவர்கள் சொல்வார்கள். "எம்பெருமானே, உன்னுடைய திருவடிக்கு அன்பு கொண்டு வாழ்வது ஒன்று முத்தியைவிட அரிது. எல்லோருக்கும் கிடைப்ப தற்கு அரியது; தவம் செய்கிறவர்கள் கூடப் பெறுவதற்கு அரியது. சிறியேன் உய்ந்திடும் வண்ணம் அந்த அன்பை எனக்கு அருள் செய்திட வேண்டும் " என்று வீரவாகு தேவர் கேட்டுக்கொண்டார். அந்த நல்வரம் முத்தியின் அரியதொன்று ; அதனைச் சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர்; சிறியேன் உய்ந்தி டும்வகை அருள்செய வேண்டுமென்று உரைப் எந்தை சுந்தவேள் உணக்கது புரிந்தனம் என்றன். (பானுகோபன்.155. (முத்தியின் - முத்தியை விட.] முருகப் பெருமான், " அப்படியே ஆகுக " என்றான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/442
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை