பானுகோபன் வதை தூதுவர்கள் சூரன் புலம்பல் வீரமகேந்திரபுரத்திலுள்ள 423 சூரபன்மனிடம் சென்று, "உன் மகன், வீரவாகு தேவரால் முடிந்துவிட்டான்' என்று சொன்னார்கள். அவன் பலபடியாகப் புலம்பினான். அந்தப் புலம்பல் மிக விரிவாக இருக்கும்; சுவையாக இருக்கும். "எத்தனையோ பிள்ளைகள் மாய்ந்தார்கள். f மற்றவர்கள் ராய்ந்து போனாலும் நீ எனக்குப் பெரிய பலம், துணை என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது என்னைத் தனியே வைத்து நியும் போய்விட்டாயே! இனிமேல் எனக்கு உயிர் வாழ்கின்ற திறன் உண்டா?' 27 வன்னச் சிறுவர்பலர் மாய்ந்தார்; அவர்மாய்ந்தும் உன்னைத் துணையென் றுளங்கொண் டிருந்தனனால்; என்னைத் தனியேவைத்து எந்தையும்ஏ குற்ற னையால், பின்னைத் தமியேன் பிழைக்கும் படிஉண்டோ ? பகைவர்களைச் சிறைவிட்டால் (பானுகோபன்.165.1 நாம் பிழைத்துவிடலாம் என்று முன்பு சொன்னாய். நான் நீ சொன்ன பேச்சைக் கேளாமல் உன்னைத் தோற்றுவிட்டேன். இனிமேல் அதனை எண்ணி என்ன பயன்? எல்லாம் அவரவர்கள் செய்த வினையின் படியே வருகிறது என்று நொந்து கொண்டான் சூரபன்மன், $ ஒன்னார் சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனம் சொன்னாய் ; அதுவும் இசுழ்ந்துன்னைத் தோற்றனனால்; என்னாம் இனிஅதளை எண்ணுவது? யாவருக்கும் தன்னால் வராத வினையுளதோ தக்கோனே.
- தன்னால்
" ( பானுகோபன்.166.1 (ஒன்னார் - பகைவர்களுடைய. உய்வு - பிழைத்தல்.] வராத விளையுளதோ என்று சூரபன்மனுக்குக் காஞ்சம் அறிவு வருகிறது. ஆயினும் அந்த அறிவு நெடுநேரம் நிற்கவில்லை. பின்பு சூரபன்மனுடைய மனைவி பதுமகோமளை வந்தாள். தன் மகன் இறந்து கிடப்பதைப் பார்த்தாள். "நான் அப்பொழுதே சொன்னேன். தேவர்களுக்குத் துன்பம் செய்யக் கூடாது, அவர்களை