பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/446

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 கந்தவேள் சுதையமுதம் சிங்கமுகன் செய்த கடும் போர் சிங்கமுகாசுரன் போர்க்களத்திற்கு வந்தவுடன் அமரர்கள் முருகனிடம் வந்து அவன் வந்ததைக் கூறினார்கள். அப்போது வீரவாகு தம்மைப் போர்க்களத்திற்கு அனுப்பும்படி வேண்டினார். அதைக் கண்டு முருகன்,இறந்து போவதற்காகவே வந்திருக்கிற பகைவனோடு போர் செய்யவேண்டுமென்று விரும்பினாய். இங்குள்ள படைகளுடன் நீயே போருக்குச் செல்வாயாக" என்றான். ஆண்டகை மூரலொடு அம்மொழி கேளா மாண்டிட வத்திடும் மாற்றலன் வெம்போர் வேண்டினை; நன்று ; விடுத்தனம்; முன்நீ ஈண்டுள தாணையொடு ஏகுதி என்றான். (சிங்கமுகாசுரன். 68.) [ஆண்டகை முருகன். மூரலொடு - புன்ளகையோடு, மாற்றவன் பகைவன்.] வீரவாகு ஒன்பது லட்சம் வீரர்களுடன் புறப்பட்டார். போர் மூண்டது. 2 க் அங்க சிங்கமுகாசுரனுக்கு ஆயிரம் தலைகள். பல விதமான மாயங் களில் வல்லவன் அவன். அவனுக்கு மிஞ்சி வேறு யாரும் இல்லை. இரண்டு பேர்களும் கடும்போர் செய்தார்கள். சிங்கமுகா சுரனின் முன்னணிப்படைகள் அழிந்தன. தசமுகன் என்பவன் முன் வந்து சிங்கனை எதிர்த்தான். சிங்கன் என்னும் வீரன் தசமுகனை கொன்றான். தன் பக்கத்தில் யாவரும் தோற்பது கண்டு சி முகனே முன்னணிக்கு வந்தான். பூதர்கள் பெரிய பெரிய மலைகளை எடுத்து அவனைத் தாக்கினார்கள். அவைகள் எல்லாம் சிங்கமுகன் விட்ட அம்புகளினால் பொடிப்பொடி யாயின. சிங்கமுகன் தன் கையிலே அகப்பட்ட பூதர்களைப் பற்றிக் கடலிலே வீசினான். பலரைப் பற்றி மலையிலே வீசினான். சிலரைச் சூரிய மண்டலத்திற்குப் போகும்படி வீசினான். அவன் செய்த போரில் வீரர்கள் லட்சத்து எண்மர்களும் தோற்றுப் போனார்கள். பார்மேல் எற்றும் சிற்சிலர் தம்மைப் பகைவிண்ணோர் ஊர்மேல் ஏற்றும் சிற்சிலர் தம்மை; உயர்பானுத் தேர்மேல் ஏற்றும் சிற்சிலர் தம்மைத் திரைசேர் முந் நீர்மேல் எற்றும்; சிற்சிலர் தம்மை நெடிதோச்சும். பானு - சூரியனுடைய. (எற்றும்-மோதுவான். தூச்சும் - உயரே தூக்கி எறிவான்.] (திங்கமுகாசுரள். 138.} முந்நீர்-கடல், நெடிது