பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கமுகாசுரன் வதை வில்இ ழந்தனன், மானமும் இழந்தனன், வீரச் சொல்இழந்தனன், பெருமிதம் இழந்தனன், தொல்சீர் எல்இ ழந்தனள், பெருமையும் இழுத்தனன், இலங்கும் பலஇ பூந்திடு விடஆரா ஓத்தனன் பதகன். 429 (கிங்கமுகாசுரன். 277.1 (பெருமிதம் -பெருமை. என் -ஒனி.பதகன்-பாவி.] உடனே சிங்கமுகாசுரன் தன் கையில் இருத்த பாசத்தை எடுத்து வீசினான். அந்தப் பாசம் எல்லோரையும் கட்டி, மயங்கச் செய்தது. வீரவாகு தேவரும் லட்சத்து ஒன்பது வீரர்களும் மயங்கிப் போனார்கள். அவ்வளவு பேரையும் கட்டித் தூக்கிக்கொண்டு போய் உதயகிரியில் கொண்டுபோய்ப் போட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறிவிடாமல் காவலும் காத்தது. கூதிபடர் கின்ற காலிற் கருத்தினிற் கடிதின் ஏகித் துதியுறு திருவின் கேள்வன் துயில்புரி கடலில் துஞ்சும் உதயமால் வரையின் எய்தி, உயிர்ப்புஇலாது உறங்கு கின்ற மதவலி வீரர் தம்மை வைத்துடன் இருத்தது அன்றே. [சிங்கமுகாசுரன். 290.) [கதி -வேகம், காலின் காற்றைவிட கடிதின் - விரைவில். திருவீன் கேன்வன் - திருமால், கடலில் - கடலைப்போல், உயிர்ப்பு-மூச்சு. மதவலி - மிக்க வலிமை.] முருகன் போர்க்களம் வருதல் இப்படிச் சிங்கமுகாசுரன் விட்ட பாசத்தினால் வீரவாகு தேவர் முதலியவர்கள் மயங்கியதையும், உதயகிரியில் போய்க் கிடப் பதையும் சில தூதர்கள் முருகப் பெருமானிடம் போய் அறிவித் தார்கள். அப்போது முருகப் பெருமான் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு தானே போர்க்களத்திற்கு வந்து சேர்ந்தான். முருகப் பெருமான் வரும்போது திருச்சின்னங்கள் அவன் பெருமையை எல்லாம் சொல்லி ஊ ஊதின. மூவர்கள் முதல்வன் வந்தான், முக்கணான் குமரன் வந்தான்; மேவலர் மடங்கல் வந்தான்; வேற்படை வீரன் வந்தான்; ஏவரும் தெரிதல் தேற்றது இருந்திடும் ஒருவன் வந்தான் ; தேவர்கள் தேவன் வந்தான், என்றன சின்னம் எல்லாம். (சிங்கமுகாசுரன்.303) [மேவலர் மடங்கல் - பகைவர்களுக்குச் சிங்கம் போன்றவன். தெரிதல் தேற்றது- அறிய முடியாமல்.)