பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கமுகாசுரன் வதை சிங்கமுகனும் முருகனும் பொருதல் 433 அப்போது முருகப் பெருமான் ஓர் அம்பு விட, அது சிங்கமுகா சுரன் மார்பை ஊடுருவிச் சென்றது. ஆண்டவன் எய்த அம்பினால் அந்த அரக்கனது மார்பிலும், முதுகிலும் துளைகள் உண்டாயின. அந்தத் துவாரங்களின் வழியே, சிங்கமுகாசுரனின் வயிற்றுக்குள் இருந்த பூத கணங்கள் எல்லாம் புற்றிலிருந்து வெளியில் வருகிற கறையான்களைப் போல வெளி வந்துவிட்டன. - கற்றையங் கதிர்வேல் அண்ணல் காமரு பகழி மாய மற்றுஅவன் புறனும் மார்பும் வாயில்கள் ஆத லோடும் அற்றது நோக்கித் தீயோன் அகட்டுறை கணங்கள் முற்றும் புற்றெழு சிதலை என்ன ஆந்தெறி துருவிப் போந்த. (கிங்கமுகாசுரன்.360.) காமரு அழகையுடைய. பகழி - அம்பு. புற்னும் - முதுகிலும். அற்று அது அத்தகைய நிலையை. அகடு வயிறு. சிதலை - கறையான். சிங்கமுகன் ஒரு தண்டத்தை விட்டான். அதை முருகப் பெருமான் ஒரு பாணத்தால் அறுத்தான். பிறகு முருகப் பெருமான் அம்பை ஏவ, அது சிங்கமுகாசுரன் நெற்றியில் பட்டது. அவன் ப்படியே மயங்கினான். மயங்கி விழுந்தபோது அவன் வாய் திறந்து கொண்டது.வாய் வழியே தேவர்கள் வந்துவிடக் கூடாது என்று கையினால் அதைப் பற்றிக்கொண்டான். கையும் கீழே சோர்ந்து விழ, அவன் வாய் வழியாகவும் அவனது வயிற்றுக்குள் இருந்த பூத கணத்தினர் வெளி வந்தார்கள். அறந்தவிர்ந்து ஒழுகினோன் ஆகத் தன்னிடைத் திறந்திடு நெறிகளால் சிறையின் வைப்புஒர் இப் பறந்திடு புள்எனப் படர்ந்து கந்தவேன் புறந்தனில் வந்தன, பூதம் யாவுமே. {சிங்கமுகாசுரன். 365.) [ஆகம்-உடம்பு. நெறி - வழி. சிறையின் வைப்பு - கிறைபோன்ற கூடு. ஓரீஇ - நீங்கி.] இப்படி அவன் உடம்பில் பட்ட துவாரங்களிலிருந்து பூத கணத்தினர் யாவரும் வெளியில் வந்து விட்டார்கள். $5