பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கமுகாசுரன் வதை 435 துயரத்தில் மூழ்குகின்ற பிறவியை அடைந்தால்தான் என்ன? எம் தந்தையே, உங்கள் அருள் எங்களுக்கு இருந்தால் எந்த இடத்திலும் எங்களுக்கு எந்தக் குறையும் வராது" என்று சொன்னார்கள். மூந்தை உணர்வு முடிந்தால்என்? ஆருயிர்போய் அந்த நிரயத்து அழுந்தி அயர்ந்தால்எள்? வெந்துயரம் முழ்கி வினைப்பிறவி புக்கால்என்? எந்தை அருள்உண்டேல் எமக்குஎன் குறைஎன்ஞர். (சிங்கமுகாசுரன். 375.) [முந்தை உணர்வு முன் இருந்த நிளைவு, நிரயத்து - நரகத்தில்) இறைவனுடைய திருவருள் இருந்தால் எந்த நிலையிலும் இன்பத்தைப் பெறலாம். பிரகலாதன் முதலியவர்கள் எத்தனை துன்பம் அடைந்தாலும் அவற்றால் துன்புறாமல் இறைவன் திருவடி யை நினைந்து இன்ப நிலையில் இருந்தார்கள். அப்பர் சுவாமிகளை மன்னன் சுண்ணாம்புக் காளவாயில் போட்டான். அப்போதும் அவர் துன்பம் அடையவில்லை. சுண்ணாம்புக் காளவாயில் சுண்ணாம்பு வெந்து மலர்ந்து வெப்பத்தைத் தந்து கொண்டிருக்கும். அந்த ஒளி அவருக்கு நிலாப்போல இருந்ததாம். அப்போது ஒரு வகையான சத்தம் உண்டாகும். அது வீணையொலி போல இருந்ததாம். . மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.' (தேவாரம்) கண்ணாம்புக் காளவாய் அவருக்கு ஆண்டவன் திருவடி நிழலில் இருந்ததைப் போன்ற தன்மையை அளித்ததாம். நாவுக்கரசரைக் கல்லில் சேர்த்துக் கடலில் இட்டார்கள். அந்தக் கல்லே அவருக்குத் தெப்பமாக மிதந்தது. மதம் பிடித்த யானையை அவர் மேல் விட்டார்கள். அவர் ஒரு பதிகம் பாடினவுடன் அந்த யானை ஓடிப் போயிற்று. இறைவனிடத்தில் உண்மையான பக்தி உள்ளவர் களுக்கு எந்த விதமான தீங்கும் அணுகமாட்டாது. மாணிக்கவாசகர் ஒன்று சொல்கிறார். நான் நரகம் பெற்றாலும் அஞ்சமாட்டேன். உன்னுடைய திருவருளால் அந்த நிலை எனக்குக் கிடைத்தது என்றால் அங்கும் நான் சமாக