பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 கந்தவேள் கதையமுதம் அன்பற்றவன் மொய்ம்புகள் அற்றனகண்டு இன்புற்றனர் வானவர் ; ஈண்டியவை முன்பு உற்றது போல முளைத்துஎழலும் துன்புற்றனர் ; யாக்கை துளங்குறுவார். (சிங்கமுகாசுரன். 424.) [மொய்ம்புகள் - தோள்கள். துளங்குஅவார் -நடுங்குவார்.] தேவர்கள் உடம்பெல்லாம் நடுங்கின. அப்போது முருகப் பெருமான் பின்னும் பல அம்புகளை விட்டு, அவனுடைய ஒரு தலை யையும் இரண்டு கைகளையும் மாத்திரம் விட்டு விட்டு, மற்றவற்றை யெல்லாம் அறுத்தான். அப்படி அறுத்த போதும் மறுபடியும் அவைகள் முளைத்து விட்டன. இதை முருகப் பெருமான் கண்டான். அப்போது நான்கு திசையில் உள்ள தேவர்களும் பயப்படும்படியாக, மிகவும் சீற்றம் கொண்டானைப் போல முருகப் பெருமான் உங்காரம் செய்தான். அந்த உங்காரத்தினாலே உண்டான வேகம் சிங்கமுகாசுரனிடத்தில் தோற்றிய புதிய தலைகளையும், தோள்களையும், கரங்களையும் உள்ளே அழுத்திவிட்டது. மறுபடியும் அவைகள் தோன்றவில்லை.தலை யையும், காலையையும் நீட்டிக் கொண்டிருந்த ஆமை யாரையாவது கண்டால் எப்படி அவற்றை எல்லாம் உள்ளே அடக்கிக் கொள்ளு மோ அது போலச் சிங்கமுகாசுரனுடைய கைகளும், மற்ற முகங்களும் உள்ளே ஒடுங்கின. ஐயனது உங்கா ரத்தால் அசிமுகன் சீரமும் மொய்ம்பும் மெய்யிடை ஒடுங்கிற்று அம்மா; மேவினார் தம்மை நோக்கி மையுறு கருந்தாது அள்ள வன்புறக் கமடம் சென்னி ஒய்யென யாக்கை தன்ளில் ஒளிந்திடும் தன்மை யேபோல். . (சிங்கமுகாசுரன்.447.) . [அரிமுகன் - சிங்கமுகன் கருந்தாது இரும்பு, வன்புறக் கமடம் வலிய முதுகு ஓட்டை உடைய ஆமை.] அப்போது சிங்கமுகாசுரன், ஒரு தலையையும், இரண்டு கை களையும் கொண்டு உலகத்தை எல்லாம் அழிப்பான் போன்று போராடினான். மலைகளைப் பிடுங்கி எறிந்தான். அவற்றை முருகன்