பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கந்தவேள் கதையமுதம் கண்ணுக்குக் காணுவதுபோல இருந்தாலும், தனக்கென்று உருவம் இல்லாததாயும் எல்லாப் பொருள்களையும் தனக்குள்ளே அடக்கிக் கொள்வதாயும் இயற்கையில் அமைந்த விசுவரூபமாயும் இருப்பது தான். அதன் அடையாளமாக நாம் கோவிலில் லிங்கத்தை வைத்து வழிபடுகிறோம். இந்த லிங்கம் என்ற கற்பனை எவ்வளவு சிறந்தது ! அகண்ட மானதாய் எல்லாவற்றையும் தனக்குள் அடக்கி வைத்திருப்பது. இதைத்தான் உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் உள்ள பொருள் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். கச்சியப்ப சிவாசாரியார், அருவந் தனையும் உருவத்தையு மன்றி நின்றான் என்று சிவபெருமானுடைய வாழ்த்திலே இதைக் குறிக்கிறார். அவை அடக்கம் கடவுள் வாழ்த்திற்குப் பிறகு அவை அடக்கம் சொல்கிறார், கச்சியப்ப சிவாசாரியார். அவை அடக்கம் இரண்டு வகைப்படும். அவைக்கு அடங்கிச் சொல்வது, அவையை அடக்கிச் சொல்வது என்பன அவை. முதலில் அவைக்கு அடங்கிச் சொல்கிறார். "ஒன்றும் அறியாத நான் கந்தபுராணத்தைப் பாட வருகிறேன். அது எப்படி இருக்கிறது என்றால்" என்று தொடங்கி ஓர் உவமை சொல்கிறார். பழங்காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் முதலில் மணலில்தான் எழுதக் கற்றுக்கொள்வார்கள். ஆண்டவன் நாமத்தை முதலில் ஆசிரியர் மணலில் காழுதி, அதன்மேலே குழந்தை களுக்கு எழுதக் கற்றுத் தருவார். மணலில் எழுதுவது கல்வி கற்க ஆரம்பிப்பதன் முதல் படி. 'இளைய பாலகன் ஒருவன் எழுத் துக்களை மணலில் எழுதப் பழகுகிறான். சிறிதளவு எழுதத் தொடங்கினவுடனேயே, "நான் ஒரு நூலை எழுதப் போகிறேன்' என்று அவன் சொன்னால் அது எப்படியோ அதுபோன்றது நான் இறைவனுடைய புராணத்தைப் பாடப் போகிறேன் என்று சொல் வது' எனத் தம் அறியாமையைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.