448 கந்தவேள் கதையமுதம் உருத்திர சன்மன் தேர்ந்தெடுத்த செய்தியைக் குறிப்பாகச் சொல்வ தாகத் தோன்றுகிறது. குமரப் பெருமானைச் சுற்றி இருந்த அவுணப் படைகளை, அவன் விட்ட ஐந்து ஆயுதங்களும் ஒழித்து விட்டன. ஆயிரத்தோர் அண்டங்களிலிருந்து எழுந்து வந்த படைகளை எல்லாம் அட்டுச் சங்காரம் பண்ணிவிட்டு உலாவின. அப்போது சூரபன்மன் சிவபெருமான் அருளிய சக்கராயுதத்தை எடுத்து விட்டான். எம்பெருமான் அதை அழிக்க எந்த அம்பையும் விடவில்லை.தன் கையை நீட்டினான், சக்கரம் அவன் கையில் போய் நின்றது. பல வகையான மாயங்களைச் சூரன் செய்தபோது, எம்பெருமான் ஞானாஸ்திரத்தை விட்டான். சூரனுடைய மாயம் அகன்றது. தனியாகத் தன் தேரில் நின்றான் சூரன். வெவ்வேறு அண்டங்களுக்கு ஓடினான். முருகனும் அவனைத் தொடர்ந்து சென்று பொருதான். முருகப் பெருமானுடைய தாக்குதலினால் சூரன் தன் வலிமையை இழந்தான். சூரன் அமுதசீத மந்தர கூடத்தைக் கொணர்தல் அப்போது அவன் தன்னுடைய தாய் மாயையை நினைந்தான். மாயை வந்தாள். "நீ தேவர்களைச் சிறையில் வைத்தாய். அதனால் உனக்கு இந்தத் துன்பம் வந்தது. இருந்தாலும் உனக்கு நல்ல வழியைச் சொல்கிறேன். இறந்து போனவர்களை மறுபடியும் எழுப்ப வேண்டுமானால் ஒரு காரியம் செய். பாற்கடலுக்கு அப்பாலே ஒரு பக்கத்தில் அமுத சீத மந்தர கூடம் என்ற மலை இருக்கிறது. அந்த மலையை நீ இங்கே கொண்டு வந்தாயானால் இறந்துபோன வீரர்கள் எழுவார்கள் " என்று சொன்னாள். நின்றிட அனைய தன்மை நிள்உளம் மகிழும் ஆற்றால் பொன்றினர் எழுதல் வேண்டின் புறக்கடற்கு ஒருசார் ஆக மன்றல்கொள் அமுத சித மந்தர கூடம் என்றோர் குன்றுளது ; அதனை ஈண்டே கொணருதி, கூடும் என்றாள். (தூரபன்மன் வதை. 298.) [பொன்றினர்- இறந்தவர்கள். மன்றல் - நறுமணம்.] அதைக் கேட்ட சூரபன்மன் ஒரு சிங்கத்தில் ஏறிக்கொண்டு, இந்திரஞாலத் தேரைப் பார்த்து, "நீ போய் அந்த மந்தர மலையைக்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/468
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை