பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் வாழ்த்து இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன் முறைவரை வேனென முயல்வ தொக்குமால், அறுமுகம் உடையவோர் அமலன் மாக்கதை சிறியதோர் அறிவினேன் செப்ப நின்றதே. (இறை - சிறிதளவு. இலம் - தரையில், முறை - நூல் ) 27 (அவையடக்கம், 1.) முறை என்பது நூலுக்குப் பெயர். தேவாரம் முதலிய சைவ நூல்களுக்குத் திருமுறைகள் என்ற பெயரை அமைத்திருக்கிறார்கள். பன்ளிரு திருமுறைகள் சைவத்திற்கு உண்டு அங்கே முறை என் பது நூலைக் குறிக்கிறது.திரு என்பது தெய்வத்தன்மையைக் குறிக்கிறது. எல்லோரும் படிக்கவேண்டிய முக்கியமான நூலாகை யால் அதற்கு எந்தவித விசேடமும் இல்லாமல் நூல் என்றே பெய ரிட்டிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் படித்தது நாலு பக்கமானாலும் நாற்பது பக்கம் எழுத முன் வருகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். இத் தகைய காலம் வரும் என்று கச்சியப்ப சிவாசாரியார் மினைக்கவில்லை. ஆகையால் இந்த உவமையைச் சொல்கிறார். தாம் குறையுடையவர் என்பதைச் சொல்லி, தம்முடைய அடக் கத்தைக் காட்டினார் இந்தப் பாட்டில், மற்றொரு பாட்டில் அவையை அடக்கிச் சொல்கிறார். அதாவது தாம் சொல்கிற இந்த நூல் ஒரு வகையில் பயனுடையதாக ஆகும் என்பதைப் புலப்படுத்துகிறார். 6 சந்திரனில் பல குற்றங்கள் உண்டு. அது தேய்ந்து வளர் கிறது. மறுவைக் கொண்டிருக்கிறது. அந்தக் குற்றங்கள் சந்திர னுக்கு இருந்தாலும் அது நிலவைத் தருவதால் உலகத்திலுள்ள வர்கள் அதைப் போற்றுகிறார்கள். குற்றங்களை எண்ணி நிலவை யாரும் புறக்கணிப்பதில்லை. அதுபோல் என்னுடைய சொல்லில் பயன் இல்லாத பகுதிகள் இருந்தாலும் இந்தக் காப்பியத்தில் இறைவனுடைய கதை இருப்பதனால் அறிஞர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்கிறார். ஆண்டவனது கதை நிலவைப் போல அமைந்திருக்கிறது. எனது பாட்டு மறு முதலியவற்றைப்போல உள்ளது' என்று உவமை கூறுகிறார். இது ஆண்டவனது கதையைச் சொல்கிற