பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 கந்தவேள் கதையமுதம் தொல்லையில் வரம்பெறு தூரன் தன்யுடை செல்லலை : ஆங்கவன் முடிகை திண்ணமால் 1 மல்லலந் திருவுடை மாயத் தேரைந் நில்இவண் என்றனன் நிகரில் ஆணையாள். (சூரபன்மன் வதை. 348.) [செல்லலை - போகாதே. மாயத் தேரை - இந்திர ஞாலத் தேரை.] அது மேலே நகர முடியாமல் நின்றுவிட்டது. சூரன் பல வகையில் பொருதல் இந்திரஞாலத் தேர் பயன்படாமையினால் சூரன் சிங்கவாகனத் தில் ஏறி வந்து போர் செய்தான். அப்போது முருகன் சிங்க வாகனத்தை அழித்தான். சூரன் பெரிய சக்கரவாகப் புள் ஆகிப் பூத கணங்களை அலைத்தான். அப்போது முருகன் தேரில் நின்று அவனோடு போர் செய்வது சரியன்று என நினைத்தான். இந்திரன் உடனே மயில் உருவத்தை எடுத்துக் கொண்டு வந்து முருகப் பெருமானைத் தாங்கினான். இந்திரன் அணைய காலை எம்பிரான் குறிப்பும், தன்மேல் அந்தம்இல் அருள்வைத் துள்ள தன்மையும் அறிந்து நோக்கிச் சுந்தர நெடுங்கட் பீலித் தோகைமா மயிலாய்த் தோன்றி வந்தணன் குமரற் போற்றி; மரகத மலைபோல் நின்றான். . (சூரபன்மன் வதை. 378.) முருகன் அதன்மேல் ஏறிப் போர் செய்யத் தொடங்கினான். மயிலும் சக்கரவாகமும் பொருதன. முருகன் அம்பு விட்டான். முருகப் பெருமானின் வில்லைக் கடிக்கலாம் என்று சக்கரவாகப் புள் உருவம் கொண்டு சூரன் வந்தான். அப்போது தன்னுடைய வாளை வீசிச் சக்கரவாகப் புள்ளின் உடம்பை இரண்டு துண்டாக்கினான் முருகன். தேவர்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்கள். வருவது நிமலன் காணா மலர்க்காம் ஒன்றில் வைகும் ஒருதனி ஒவ்வாள் வீசி ஒன்னலன் பறவை யாக்கை இருதுணி யாகி வீழ எறிந்தனன்; எறித லோடும் அரிஅயன் முதலாம் தேவர் அனைவரும் ஆடல் கொண்டார். (சூரபன்மன் வதை. 391,} [ஒன்னலள் புகைவனாகிய சூரன். துணி - துண்டுகள். ஆடல் - மகிழ்ச்சியினால் டுதல் ] -