பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 கந்தவேள் கதையமுதம் ஒவ்வொன்றாகக் களைந்தான் முருகன். அவை போனால் அவனது அகங்காரம் குறையும் என்று எண்ணினான். ஆனால் அகங்காரத்திற்குக் காரணமான பலம் குறையக் குறைய அவனது அகங்காரம் மிகுதி யாயிற்றே தவீரக் குறையவில்லை. முருகனது திருவுள்ளம் 6 'சூரனுக்கு அருள் செய்தால் அதனை ஏற்கக் கூடிய தகுதி அவனுக்கு உண்டா? உள்ளம் உருகுவானா?" என்று சோதனை செய்ய எண்ணினான். இவ்வளவு காலம் நம் முன் நின்று போர் செய்தானே; நம் அழகைக் கண்டாலே எல்லோரும் மனம் உருகுவார் களே! இவன் உருகாமல் இருக்கிறானே!" என்று திருவுள்ளத்தில் எண்ணம் பிறந்தது. அப்போது உண்மை தெரிந்தது. சூரபன்மாவின் கண்ணுக்கு முருகன் வடிவம் தெரிந்ததே தவிர அழகு தெரியவில்லை. அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டிருந்தான். அவனுடையகண்ணுக்கு முருகப் பெருமானது திருவுருவம் மிகச் சின்ன வடிவமாகத் தோன்றியது. அதனால் அழகு தோன்றவில்லை. இது எப்படி இயல்பாக இருக்கும் என்று கேட்கலாம். நம் வீடுகளில் எறும்புகள் வரிசை வரிசையாகச் செல்வதைப் பார்க்கி றோம். அந்த எறும்புகளில் ஓர் ஆண் எறும்புக்குக் கல்யாணம் நடக்கிறது. மணமகள் எறும்பு அழகாகத்தான் இருக்கும். நமக்கு அந்த எறும்புகளின் வடிவம் தெரியுமேயொழிய அழகு தெரிவ தில்லை நம் கண்ணுக்கு அவை மிகச் சிறியனவாக இருக்கின்றன. அது போல் சூரனுக்கு முருகப் பெருமானுடைய வடிவு தெரிந் ததேயன்றி அழகு தெரியவில்லை. ஆகவே, அவன் தன்னுடைய அழகை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று முருகப் பெருமான் பெரிய வடிவத்தை எடுத்துக் கொண்டான். கண் மங்கிப் போனவர்களுக்குச் கொட்டை எழுத்துப் புத்தகத்தைக் கொடுத்து, கையில் பூதக் கண்ணாடியையும் கொடுப்பதைப்போல முருகப் பெருமான் தன்னுடைய விசுவரூபத்தைக் காட்டியதோடு சிறிது ஞானத்தையும் கொடுத்தான். எப்படியாவது அவன் தன்னைக் கண்டு மனம் உருகி நிற்க வேண்டுமென்பது முருகனுடைய