பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454 கந்தவேள் கதையமுதம் பார்த்தாலும் குழந்தை தன் முகக் கண்ணோடு பார்த்தது. தாயோ தன் முகக்கண்ணோடு, அறிவாகிய அகக்கண்ணோடும் பார்த்தாள். இப்படிப் பார்த்த பார்வையே முழுப் பார்வை, குழந்தை பார்த்த பார்வையோடு நின்றிருந்தால், அதற்குத் தீங்கு வந்திருக்கும். அந்தப் படத்திடையே தன் குழந்தையைக் கொல்லும் நஞ்சு இருக்கிறது என்பதை அறிவினால் உணர்ந்து கொண்டவள் தாய். அதனால் குழந்தையைக் காப்பாற்றினாள். கல்வியினால் அறிவு உண்டாகும். நம்முடைய கண்கள் பொருளைப் பார்த்தாலும் கூட, அவற்றைப் பற்றிய முழு அறிவு கல்வி யினால் கிடைக்கும். 46 கண்ணுடையார் என்பவர் கற்றோர்; முகத்திரண்டு புண்ணுடையார் கல்லா தவர்.' கற்றவர்களுக்கும் கண் இருக்கிறது. (குறன்) கல்லாதவர்களுக்கும் கண் இருக்கிறது. கல்வி கற்றவர்கள் கண்ணுடையவர்கள் என்றால். கல்லாதவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள் என்று சொல்ல வேண்டும், புண் உடையார் என்கிறார் வள்ளுவர். ஒரு குழந்தை கீழே விழுந்தது. அதன் காலில் ஒரு சிறிய காயம் பட்டிருக்கிறது. தாய் அதைக் குளிப்பாட்டுகிறாள். அதன் உடம்பில் அவள் கையை வைத்துத் தேய்க்கும்போது அந்தக் குழந்தை அழுகிறது. காரணம், அந்தக் காயத்தில் கை பட்டுவிட்டது. புண்ணில் கை எரியும். கண்ணில் கை பட்டாலும் எரியும். படிக்காதவர்களுக்குக் கை பட்டால் எரியுமளவுக்கே கண் இருக்கிறது. அதுவன்றிப் பொருளை ஆராய்ந்து பார்க்கிற தன்மை அதற்கு இல்லை. அதனால் படிக்காதவர்களது கண்ணைப் புண் என்று சொன்னார் வள்ளுவர். முருகன் கருணை பட்டால் சிலப்பதிகாரத்தில் மூன்று போர்களின் கால அளவைச் சொல்கிறார் இளங்கோவடிகள். பதினெட்டு நாள் நடந்தது ஒரு போர். பதினெட்டு மாதம் நடந்தது மற்றொன்று. பதினெட்டு வருடங்கள் நடந்தது ஒரு போர். பதினெட்டு நாள் நடந்த போர் தான் மகாபாரதப் போர், பதினெட்டு மாதம் நடந்தது இராம