சூரபன்மன் வை 467 என்று தெரிகிறது? இவன்தான் ஈசன் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன்.” ஒற்றென முன்னய் வந்தோன் ஒருதனி வேலோன் தண்ணைப் பற்றுஇகல் இன்றி நின்ற பராபா முதல்வன் என்றே சொற்றனன்; சொற்ற எல்லாம் துணிபெனக் கொண்டிலேனால்; இற்றை இப் பொழுதில் ஈசன் இவன்எனும் தன்மை கண்டேன். (சூரபன்மன் வதை. 404.) [பற்று இகல் விருப்பு வெறுப்பு. தணிபு - உண்மை.] "சிறப்புடைய இந்தக் குமரநாயகன் கொண்ட இந்த வடிவத்தில் ஒளி இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. இளமை இருக்கிறது. அழகு இருக்கிறது. இவைகள் எல்லாம் உலகத்தில் வேறு யாருக்கு இருக்கின்றன? பல முறை இந்த வடிவத்தைப் பார்த்தாலும் தெவிட்டவில்லையே ! கண்ணால் மேலும் மேலும் காணவேண்டுமென்ற ஆவலே மீதூர்கிறது" என்று வியந்து பேசினான். சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவத் தன்னில் ஏர்க்குறும் ஒளியும் சீரும் இளமையும் எழிலும் எல்லாம் ஆர்க்குஉள உலகில், அம்மா ! அற்புதத் தோடும் பல்கால் பார்க்கினும் தெவிட்டிற் றில்லை இன்னும்என் பார்வை தானும். (சூரபன்மன் வதை. 437. ) (ஏர்க்கு உறும் எழுச்சிக்கு ஏற்றபடி அமைந்த] - முருகனுடைய அழகு அடுத்தபடியாக அந்தப் பெருமானுடைய அழகை வியந்து. பேசுகிறான். முருகன் என்பதற்கு முருகு உடையவன் என்று பொருள். முருகு என்பதற்கு இருபதுக்கும் மேற்பட்ட பொருள் உண்டு. அவற்றில் நான்கு முக்கியமானவை. திருமுருகாற்றுப் 58
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/477
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை