460 கந்தவேள் கதையமுதம் 'இனைய தொல்லோன்' என்று இங்கே சொல்கிறான். 'இப்படி இருக்கிற பழையவன்' என்று பொருள். "நான் இவனைப் பாலன் என்று எண்ணி இருந்தேன். அநாதிகாலமாக இருக்கிற மிகப் பழையவன் என்றல்லவா இப்போது தோன்றுகிறது, உள்ளத்தில்?" 1 என் இனைய தொல்லோன் - இங்கே இருக்கும் பழையவன் என்றும் பொருள் கொள்ளலாம். அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டு என்று இரண்டு சுட்டுகள் உண்டு. அகரச் சுட்டு சேய்மையில் இருப்பதைச் சுட்டுவது; இகரச் சுட்டு பக்கத்தில் இருப்பதைச் சொல்வது. ஆண்டவன் சேய்மையில் இருப்பவன். அவனை அவன் என்றும் அது என்றும் வேதங்கள் சொல்லும், வேதமே அவனைத் தூரத்தில் இருக்கும் பொருளாக அவன் என்று சொல்கிறது. ஆனால் இங்கே சூரபன்மன், 'இங்கே இருக்கும் தொல்லோன்' என்று சொல்கிறான், ஏன்? தென்மொழி வேதமாகிய தேவாரம் 'இவன்' என்று சொல்கிறது. 41 . று. பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே" என்று ஞானசம்பந்தப் பெருமான் பாடுகிறார். சிவபெருமான் அந்தப் பெருமானுக்கு முன்னால் தோன்றி மறைந்த பிறகு பாடிய பாட்டு இது. பக்கத்தில் இருந்த போது பாடினாலும் பொருள் உண்டு. அவர் மறைந்த பிறகு அவன் என்று அல்லவா சொல்ல வேண்டும்? இங்கே புறநானுற்றுப் பாட்டு ஒன்று நினைவு வருகிறது. ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் ஒரு சபதம் செய்கிறான். 'சிங்கம் போலச் சினந்து மிக்க படையுடைய வேந்தர்கள் எல்லாம் ஒருங்கு கூடி என்னோடு போர் செய்ய வரும்போது அவர்களிடம் நான் தோற்றேன் ஆயின் இன்ன இன்ன இழிவு எனக்கு உண்டாகுக' என்று சபதம் செய்கிறான். அப்போது, 'என்னுடைய மனைவியினின்றும் பிரிவேனாக' என்று சொல்கிறான். சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக" என்கிறான். அவன் மனைவி அந்தப்புரத்தில் இருக்கிறான். அந்தப் புரத்திலுள்ள மனைவியை அவள் என்றல்லவா சொல்ல வேண்டும்?
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/480
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை