சூரபன்மன் வதை 461 'இவள்' என்கிறானே என்றால், நெஞ்சுக்கு அணியளாதலின் இவள் என்றான். அதாவது உடம்பு தூரத்தில் இருந்தாலும் உள்ளத்தில் இருக்கிறாள்.அதனால் இவள் என்று அணிமைச் சுட்டாகக் கூறினான். இப்படி உரைகாரர் எழுதுகிறார். இதற்கு வேறு சான்று எதையும் தேட வேண்டாம். நம்முடைய நாட்டில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் கணவன் லண்டனில் படிக்கிறான். அந்தப் பெண் இந்த ஊரிலே இருக்கிறாள். அவளிடம், "உன் கணவர் எங்கே?" என்றால், "இவர் லண்டனில் இருக்கிறார்" என்று சொல்வாள். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலே இருக் கிற கணவனை அவள் இவர் என்று சொல்கிறாளே என்றால், அவள் நெஞ்சில் அவன் எப்போதும் இருப்பதனால் அப்படிச் சொல்கிறாள். ஆகவே, சூரபன்மன் தனக்கு முன்னே இவ்வளவு காலமாக முருகன் நின்றாலும் உணர்ந்து கொள்ளவில்லை, இப்போது உணர்ந் தான். அவன் நெஞ்சில் முருகன் இருக்கிறான். ஆகையால், இளைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார்? என்று 'இனைய தொல்லோன்' என்று அண்மைச் சுட்டினால் சொல்கிறான். இறைவன் திருவடி முருகப் இங்கே மற்றொரு நயத்தையும் காணவேண்டும். பெருமான் பெரிய திருவடியைக் கொண்டவன். அந்தத் திருவடியின் அழகிலே தன் உள்ளத்தைச் செலுத்தி எண்ணிப் பார்க்கிறான் சூரபன்மன். ஆண்டவனது வடிவத்தைக் காணுகின்ற அடியார்கள் ஒருவாறு எல்லா அங்கங்களையும் பார்த்தாலும் தங்களுக்குரிய புகலிடமாக அவன் திருவடியைப் பார்ப்பார்கள். ஒரு குழந்தை தாயின் மடியில் தவழ்கிறது. அவள் இடையில் ஏறுகிறது. ஆனால் பசி வந்தால் பால் தரும் அங்கத்தையே நோக்கும். அது போல உருகுகின்ற அன்பர்கள் இறைவன் திருவடியையே பார்ப்பார்கள். இதனை நினைந்தே திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் இறைவன் திருவடியைச் சொல்கிறார். ஆண்டவனுடைய அடியை லட்சியமாகக் கொண்டவர்களானதால் அவர்களுக்கு அடியார்கள் என்ற பெயர்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/481
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை