பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 கந்தவேள் கதையமுதம் என்றால் மனத்திற்கும் அவன் அழகு அடங்காது" என்று சொல்கிறான். "என்பால் எம்பெருமான் போர் செய்ய வந்திருக்கிறான். இது எனக்கும் அவனுக்கும் நடக்கும் போர் என்றா சொல்வது? எனக்கு அருள் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு வந்திருக்கிறான். இது அவனுடைய அருள் " என்கிறான். அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திறம் நோக்கி னாலும் அவன் கண்ணினால் அடங்காது; உன்னின் கருத்தினால் அடங்காது; என்பால் நண்ணினான் அமருக்கு என்கை அருள்ளன நாட்ட லாடும். (சூரபன்மன் வதை. 441.) ஊழி - யுகம். என்கை - என்பது.] முருகன் திருவருள் முருகப் பெருமான் சூரபன்மனை ஆட்கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். அவனால் ஆட்கொள்ளப்பட வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இல்லாதவுள் அந்த அசுரன், உண்மையில் ஆண்டவனுக்கு நம்மை ஆட்கொள்ள வேண்டுமென்ற அருள் மிகுதி யாக இருக்கிறது. நாம் அவனை எண்ணாமல் இருந்தாலும் அவன் நம்மை எண்ணிக்கொண்டு இருக்கிறான். ஒரு புஞ்சைக் காடு, அதில் ஒரு பெரிய கிணறு; அதில் தண்ணீர் இறைக்கிறபோது ஒரு பெண் குடத்தைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டாள். அவள் கணவன் வந்தான். அவள் அவனிடம், "குடத்தைக் கிணற்றுக்குள் போட்டு விட்டேன்: யாரையாவது ஆளைக் கூப்பிடுங்கள், எடுக்கவேண்டும்" என்றாள். ஏன், என்னைப் பார்த்தால் ஆளாகத் தோன்றவில்லையா?" என்று 64 சொல்லிக்கொண்டே அவன் குடத்தை எடுக்கக் கிணற்றுக்குள் குதித்தான். ஒரு தரம் மூழ்கினான். குடம் தட்டுப் படவில்லை. மறுபடியும் மூழ்கினான்; குடம் கிடைக்கவில்லை. எட்டுத் தடவை மூழ்கியும் அகப்படவில்லை. ஒன்பதாவது தடவை மூழ்கினபோது தான் குடம் அகப்பட்டது.குடம் ஒரு தரந்தான் மூழ்கியது. அந்தக்