பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரபன்மன் வதை 469 உடம்பினால் ஆண்டவனை வழிபட வேண்டுமென்று எண்ணினான். அவன் திருவடிகளைப் பலமுறை வலம் செய்ய வேண்டும்; அவனை கைகுவித்து வணங்க வேண்டும்; அவன் பாதத்தில் வீழ்ந்து தலையால் வணங்க வேண்டும்; தீமை எல்லாம் போய் அவலுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்று என் நெஞ்சம் சொல்கிறது" என்றான். அப்போது எம்பெருமான் சற்றே திரை போட்டான். உடனே, இப்படி எல்லாம் ஆசை இருந்தாலும் மானம் தடுக்கிறதே! என்று சூரன் சொன்னான். சூழுதல் வேண்டும் தான்கள்; தொழுதிடல் வேண்டும் அங்கை ; தாழுதல் வேண்டும் சென்னி; துதித்திடல் வேண்டும் தாலு: ஆழுதல் வேண்டும் தீமை அகன்றுநான் இவற்கு ஆளாகி வாழுதல் வேண்டும் நெஞ்சம்; தடுத்தது மானம் ஒன்றே. (சூரபன்மன் வதை. 444.) (குமுதல்-வலம் வருதல். வேண்டும் - விரும்புகின்றன. கால்கள் சூழுதலை வேண்டுகின்றன. தானு -நாக்கு) "கடம்ப மாலையை அணிந்த எம்பெருமான் இவ்வளவு காலம் நீளமான போரை ஆக்கினான். இது அவனுடைய திருவிளையாட லின் இயற்கை என்று தெரிந்து கொண்டேன். அவன் என்னைச் சங்காரம் செய்ய வேண்டுமென்று எண்ணியிருந்தால் அதை யார் மாற்ற முடியும்? ஒரு கணத்தில் செய்துவிடுவானே : எனக்குத் தனது தரிசனத்தைக் கொடுக்க வேண்டுமென்று அல்லவா வந்திருக்கிறான்? ஏடவிழ் அலங்கல் மார்பன் என்னுடன் இந்நாள் காறும் நீடிய இகற்போர் ஆற்றி நீங்கலான், நின்ற தெல்லாம் ஆடலின் இயற்கை என்றே அறிந்தனன்; அஃதான்று, அன்னான் சாடிய வேண்டும் என்னின் யார்அது தாங்கற் பாலார்? அலங்கள் - மாலை (சூரபன்மன் வதை. 446.) இகற்போர் - பகைத்தலையுடைய போர். ஆடலின் இயற்கை - திருவிளையாடலின் இயல்பு. அஃதான்று -அப்படியல்லாமல். (ஏடு - இதழ். சாடிய - அழிக்க.]