பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடும் நகரமும் புராண காப்பியங்கள் புராணங்களில் நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம் முதலிய வற்றை அமைத்துப் பாடுவது தமிழ் மரபு. வடமொழியில் புராணங் களுக்குக் காப்பியங்களைப்போன்ற சிறப்பு இருப்பதில்லை.ஆனால் தமிழிலே பல பெரும் புலவர்கள் புராணங்களைக் காப்பியத்திற்குரிய உறுப்புக்களோடு பாடியிருக்கிறார்கள். அந்த வகையில் கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணத்தைக் காப்பியமாக அமைத்துப் பாடி யிருக்கிறார். ஆற்றுப் படலம், நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகிய உறுப்புகள் இந்தப் புராணத்திலும் இருக்கின்றன. முதலில் ஆற்றுப் படலம் வருகிறது. தொண்டை நாட்டின் சிறந்த ஆறாகிய பாலாற்றைப் பற்றி வருணிக்கிறார். நந்தி மலையி லிருந்து பாலாறு தோன்றுகிறது. மேகங்கள் மலைமுகட்டில் மழை பெய்ய, அங்கிருந்து நீர் கீழே வந்து ஆறாகப் பெருகி நாட்டுக்கு வளம் உண்டாக்குகின்றது என்பதை நயமாகச் சொல்கிறார். அங் கங்கே பல உவமைகளை எடுத்தாள்கிறார். கவிஞர்களுக்கு உவமை என்பது ஓர் அழகான அளவு. எந்தப் பொருளையும் உவமையால் புலப்படுத்துவது சிறந்த கவிஞர்கள் வழக்கம். அவரவர்கள் மன இயல்புக்கேற்றபடி உவமைகள் வரும். சேக்கிழார் பாடலில் தெய்வ சம்பந்தமான உவமைகள் வரும். கச்சி யப்ப சிவாசாரியாரும் அத்தகைய மன இயல்பு உடையவர். ஆகை யால் அவருடைய பாடல்களில் எல்லாம் தெய்வத்தன்மை மணக்கும் உவமைகளை அங்கங்கே பார்க்கலாம். ஆற்றுப் படலத்தில் வருகிற ஒரு பாட்டைப் பார்க்கலாம். திண்ணனார் உவமை நந்தி மலையில் மேகங்கள் வந்து மழை பொழிகின்றன. அதற்கு உவமை சொல்ல வருகிறார். மேகத்தில் இந்திர வில் இருக்கிறது: வானவில். அதோடு தோன்றிய மேகம் மலையின் மேலே ஏறி நீரைப் பொழிகின்றதற்கு உவமை சொல்கிறார். வேடர் குலத்தில் தோன்றிய கண்ணப்பநாயனார் தம் வாயில் இருந்த தண்ணீரைப் பெய்து இறைவனுக்குத் திருமஞ்சனம்