பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 கந்தவேள் கதையமுதம் ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர் ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித் தியழற் சிகழி கான்று சென்றிட, அவுணன் கொண்ட மாயிருள் உருவம் முற்றும் வல்விரைந் தகன்ற தன்றே. (சூரபன்மன் வதை. 465. (தொட்ட-ஏவிய. இருதலை - துணியும் அடியும். ஞாங்கர் வேல். அருக்கரில் சூரியர்களைப் போல. சிகழி - கொழுந்து, வல்லிரைந்து - மிகவேகமாக) முருகன் சூர்மாத் தடிதல் அப்போது சூரன் கடலுக்கு நடுவே சென்று மாமர வடிவாக நின்றான். இங்கே கச்சியப்பர் தொனி நயம் அமையும்படி ஒரு பாட்டுப் பாட்டுகிறார். } அத்தியின் அரசு பேர, ஆலமும் தெரிக்கின் ஏங்க, மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற, வீரை யாவும் தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன் உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்றான். (சூரபன்மன் வதை. 474) (அத்தி-கடல். அரசு - வருணன். ஆலம் -விஷம், வன்னி - அக்கினி, விரை கடல்நியம் கடம்பு.] . இந்தப் பாட்டில் அத்தி, அரசு, ஆலம், வாகை, வன்னி, இருப் பை, நீபம், வேல் என்ற மரங்களின் பேர் தொனிக்கின்றன. மா மரமானான் என்று சொல்ல வந்தவர் அதோடு பல மரங்களின் பெயர் கள் தொனிக்கும்படி பாடுகிறார். கடலுக்கு அரசனான வருணன் பிளந்து போகவும், ஆலகால விஷமும் ஏங்கவும், உண்மையான பலத்தையும் வெற்றி மாலையையும் உடைய அக்கினி மெலிவு அடைய வும், கடல்கள் எல்லாம் தம்முடைய நிலை நீங்கித் தத்தளிக்கவும், கடம்ப மாலையை உடைய முருகப் பெருமான் விடுத்த வேலாயுதத் திற்கு முன்னாலே மிக உயர்ந்த தனி மாமரமாகச் சூரன் நின்றான்' என்பது இந்தப் பாட்டின் பொருள். 1 அந்த வேல் மாமரத்தைத் துண்டாக்கி விட்டது. அப்போது சூரன் பழைய உருவத்தோடு, கையில் வாள் கொண்டு முருகனோடு போரிட வந்தாள். வேலாயுதம் அப்படி வந்த சூரனை எதிர்த்து, அவன் மார்பைக் கிழித்து இரண்டு கூறாக்கி, வேதங்கள் எல்லாம் ஆரவாரம் செய்ய, ஆகாசத்தில் போய்க் கங்கையில் நீராடி மீண்டும் முருகப் பெருமான் திருக்கரத்தை வந்து அடைந்தது.