479 என்ற இரு பெண்கள் முருகளை ள் என்பதை முன்பே பார்த்திருக் இருதவல்லி இந்திரனிடம் போய்த் தேவ ராடு வளர்ந்தாள். இந்திரனிடம் இருந்த ப் பாதுகாப்பாக இருந்தது. அதனால் தேவ வகுஞ்சரி என்றும் பெயர் அவளுக்கு ஏற்பட்டன. தன்னுடைய நாட்டையே முருகப் பெருமானுக்குத் சொன்னான். அப்போது முருகப் பெருமான் அதை றுத்தான். தேவசேனைக்குத் தலைவனாகவே இருக்கிறேன் சொன்னான். 1 வானோர் வணங்குவில் தானைத் தலைவ" று திருமுருகாற்றுப்படை சொல்கிறது. தேவசேனாபதி என்றால் தவர்களின் படைக்குத் தலைவன் என்று பொருள். அதுமட்டுமன்று. அவனே எல்லோருக்கும் தலைவன். அமெரிக்காவில் ஜனாதிபதி கடைக்கெல்லாம் தலைவராகவும் அந்தக் குடியரசுக்குத் தலைவராகவும் எப்படி இருக்கிறாரோ அப்படியே தேவசேனாபதியாகிய முருகன் இந்தி ராதி தேவர்களுக்கு எல்லாம் பெரிய தலைவனாக விளங்கினான். போர்க் களத்தில் தேவ சேனைகளுக்கு எல்லாம் அதிபதியாக, தேவசேனா பதியாக விளங்கினான். கடைசியில் சூரபன்மாவை ஆட்கொண்டான். இந்திராதி தேவர்கள் செய்த பாவத்தினாலும், கொண்ட தருக்கினாலும் சூரபன்மாவினுடைய ஆணைக்கு அவர்கள் அடங்கி நிற்க வேண்டி வந்தது. சூரனோடு ஆண்டவன் போர் செய்த போது, அவன் தங்களுக்குச் செய்த பரமோபகாரத்தைக் கண்ணால் கண்டு களித் தார்கள். மறுபடியும் அகங்காரம் வராமல் இருக்க வேண்டுமென்று இந்திரன் எண்ணினான். "எம்பெருமானே, நீ தேவசேனாபதியாக இருந்து எங்களுக்கு நலம் செய்தாய். எங்களுடைய பழைய அரசை வாங்கித் தந்தாய். நாங்கள் பழையபடி பதவியைப் பெற்றோம். மறுபடியும் எங்களுக்குப் பதவியினால் தருக்கு உண்டாகாமல் இருக்க வேண்டும். நீ தேவ சேனாபதி என்ற நினைவு எப்போதும் எங்களுக்கு இருக்க வேண்டும். ஆனால் மறுபடியும் -போர் உண்டாக, படைக்கு நீ தலைவனாக இருக்க வேண்டுமென்று நான் நினைக்கவில்லை. வேறு ஓர் வகையில் நீ
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/499
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை